பக்கம்:சீவகன் கதை.pdf/100

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கேமமாபுரத்தும் ஏமமாபுரத்தும்


யாலே சீவகன் அப்போது கனகமாலையோடு மகிழ்ந் துள்ள காட்சியை நந்தட்டன் கண் எதிரே காணுமாறு காட்டினாள். கண்ட நந்தட்டன், அன்னை போன்ற தத்தையின் அடி வீழ்ந்து, சீவகனைத் தான் உடனே சென்றடைய வழி காட்டியருள வேண்டினான். தத்தை யும் தன் விஞ்சையாலே நந்தட்டனை ஏமமாபுரத்துக்கு அனுப்பும் ஏற்பாட்டினைச் செய்தாள்; அவனது உரு வினைச் சீவகனே என்னுமாறு ஒளி பெறச் செய்து, அவனை வான் வழியே தெய்வ வலியான் ஏமமாபுரத்துக் குச் செலுத்தினாள். அவன் சென்ற வேளையில் பொழுது புலர்ந்தது.

அதுகாலை அங்குத் துயிலெழுந்த அரச குமரனான விசயன், அவனைச் சிவகனே என நினைத்தான் போலும்! அருகே சென்று காண, 'அவனைப்போன்றானாயினும், அவ னல்லன்,' என உணர்ந்தான்; 'நீ யார்?' எனக் கேட்டும் நந்தட்டன் ஏதும் கூறாதிருக்கவே, கனகமாலையோடிருந்த சீவகனிடம் சென்று உற்றதை உரைத்தான்.அவ னும் விரைந்து வந்து நந்தட்டனைக் காண,

      ‘ தருமனை அரிதிற் கண்ட தனஞ்சயன் போலத் தம்பி 
       திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது நின்றான்.'
                                                            (1724)

வந்த தம்பின் யை வாரி எடுத்தணைத்துச் சீவகன் தான் அதுவரை தன் நிலை உணர்த்தா திருந்ததைப் பொறுக்கு மாறு கூறினான். அவனோ, எதற்கும் வருந்தாது, வருத் தத்தும் தம்பியை உடன்கொண்டு சென்ற இராமனைப் போன்று தன்னையும் உடன் துணைக்குக் கொள்ளாது வந்தது கொடுமையென்றான். சீவகன் தம்பியைத் தேற்றி, அந்தப்புரம் அழைத்துச் சென்றான். நந்தட் டன் கனகமாலையைக் கண்டு, அவளையும் தாழ்ந்து வணங் கினான். பின்னர்த் தம்பியும் தமையனும் அங்குத் தங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/100&oldid=1483932" இலிருந்து மீள்விக்கப்பட்டது