பக்கம்:சீவகன் கதை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

                     சீவகன் கதை

சீவகனை எவ்வாறு காண்பது!' என்று திட்டமிடலாயினர். அந்தப்புரத்து இன்பமாளிகையில் கனகமாலை யோடு உள்ள சீவகனைத் தம்மிடை விரைவில் காண வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று அவர்களுக்கு. ஆம். இது வரை தம் தோழன்-தலைவன்-என்ற நிலையிலிருந்த சீவகன், இப்போது தங்கள் நாட்டு மன்னனே என அவர்கள் அறிந்தமையின், அவர்கள் மகிழ்ச்சி முன்னினும் பன்மடங்கு அதிகரிக்க, விரைந்து அவனைக் கண்டு வணங்க விரும்பினார்கள்; பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்கள்; தாங்கள் தங்கிய அந்நகரத்துப் புற எல்லையிலிருக்கும் பசுக்கூட்டங்களையெல்லாம் மடக்கின், அவற்றை மீட்கச் சீவகன் வருவான் என்று முடிவு செய் தார்கள்; அதற்கு முன்பே அந்நகர நிகழ்ச்சிகளால் சீவகன் அங்குள்ளதையும் உணர்ந்தார்கள்; செய்த முடிவைச் செயலில் காட்டவும் தொடங்கினார்கள். ஏமமா புரத்துப் பசுக்கூட்டம் யாரோ பகைவரால் கொள்ளப்பட்டது என்ற செய்தி மன்னவனுக்கு எட்டிற்று. அது கேட்டறிந்த சீவகனும் உடனே தேரேறிப்புறப்பட்டான். உண்மை வெளிப்படுதல்: வேறு படை ஒன்றும் வேண்டானாய்த் தான் ஒருவனாகவே தனித்தேரின் மேலேறி வில்லைக் கையிற்கொண்டு பசு மீட்க வரும் சீவகனைக் கண்டனர் தோழர் நால்வரும். சீவகன் தேர்மேல் செல்வதைக் கண்ட அந்நகர மாந்தரெல்லாரும் அவன் செவ்வியைக் கண்களால் பருகிப் போற்றினர். சீவகன், தன் தம்பி நந்தட்டன் தேரைச் செலுத்த, அத்தேரிலமர்ந்து, பகைவர்களை விரைவில் கொண்டுவரக் கருதும் உணர்விலே விரைந்து புற நகர் வந்து சேர்ந்தான். தூரத்தே ஒற்றைத் தேரில் வரு பவன் சீவகனே என்பதை அறிந்த பதுமுகன் காலம் தாழ்க்கானாய்த் தன் வில் வளைத்து, நாண் பூட்டி, தம்மைப் பற்றியும் தாம் வந்தமை பற்றியும் அரசனான சீவகனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/105&oldid=1484380" இலிருந்து மீள்விக்கப்பட்டது