பக்கம்:சீவகன் கதை.pdf/116

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உண்மை வெளிப்படுதல் 115

என்று கூறி, அலறும் மின்னற்குழாத்திடைக் கொம்பு போல நின்றான். சீவகன் சுரமஞ்சரியின் உள்ளக் கருத்தை நன்கு உணர நினைத்தான் போலும்! அவன் தன் பாடலுக்கே இப்படிப் பரிந்து வரும் தையலர் இளை யவன் ஒருவன் வரின் என்னாவரோ என்ன, இளையவர் ஒருவரும் அங்குச் செல்லலாகாது என எச்சரித்தனர். காரணம் சுரமஞ்சரி சுண்ணம்கூற, காரணமாகச் சீவகனை மணக்கக் கன்னிமாடத்துள்ளதே என்பதையும் குறித் தனர்; சீவகன் மறைந்துவிட்டானே!' என்று கிழவன் அவன் இறவாது வாழ்கின்றனன் என்பதைக் காந்தருவத்தை வருத்தமுறாதிருக்கின்ற காரணத்தால் தாம் அறிந்ததைக் கூறினர்; கூறி, அவனை மேலும் பாடு மாறு வேண்டினர். பின்பு அவன் சுரமஞ்சரியைத் தனக் குத் தந்தால் பாடுவதாகக் குறிப்புத் தோன்றப் பாட, அவர்கள் பொற்பாவை வேண்டினான் என் கொடுக்க இசைய, சுரமஞ்சரியின் முகத்தை நோக்கி இனிமையாகப் பாடலானான் சிவகன்.

தன்னையே நோக்கித் தரணியையே நைய வைக்கும் படி பாடிய கிழவனின் பாடலைக் கேட்ட சுரமஞ்சரி, உள்ளம் நெகிழ்ந்தாள். அப்பாடல் சீவகன் பாடலை ஒத்த பின் அவள் உள்ளம் சீவகன்பால் சென்றது. மறு நாளே காமன் கோட்டம் சென்று, விரைவில் அச்சீவ கனைத் தருமாறு காம தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டுமென முடிவு செய்தாள் சுரமஞ்சரி.

காமன் கோட்டத்தில்: மறு நாள் பொழுது புலர்ந்தது. எண்ணியபடியே பணிப் பெண்களும், கிழவனும், பிறரும் வர, ஆடவர் எவரையும் காணாமல் சுரமஞ்சரி காமன் கோட்டம் சென்று சேர்ந்தாள். அக்கிழவனை உடன் வைத்துக்கொண்டே காம தேவன் முன் தன் கருத்தை வெளியிட நாணிய சுரமஞ்சரி, அவனை அருகிருந்த ஓர் அறையில் இருக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/116&oldid=1484075" இலிருந்து மீள்விக்கப்பட்டது