பக்கம்:சீவகன் கதை.pdf/119

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை விளக்கி, 'விரைவில் மேற்கொண்ட செலவில் வெற்றி பெற்று வருக!' என வாழ்த்தி அனுப்பினாள். சீவகன் அவளைப் பிரியா விடை பெற்றுப் பிரிந்து வந்து, தோழ ரைச் சார்ந்தான்.

  தோழரோடு விரைந்து தன் மனையைச் சார்ந்தான் சீவகன். தன் மகன் எங்கே எங்கே என்று நினைந்து நின்ற கந்துக்கடனுக்கும் தாய் சுனந்தைக்கும் இருந்த மன வருத்தத்தைப் போக்கினான் சீவகன். பின்பு அனை வரும் அவன் வரவு கண்டு மகிழ்ந்தனர். தம் கணவனைக் கண்ட காந்தருவதத்தையும் குணமாலையும் மகிழ்ந்தனர். முதலிலே தத்தையைக் கண்டான் சீவகன். அவள் விஞ்சையர் மகளாதலின் அவனிடம் ஊடாளாய், 'வருந்தி யிருக்கும் குணமாலையை விரைந்து காண்க,' என்றாள். அவனும் குணமாலையைக் கண்டு தேற்றித் தான் வந்த வரலாற்றையெல்லாம் கூறி, அவள் வருத்தம் போக்கி, அணைத்து ஆறுதல் கூறி மகிழ்ந்தான்.
   சீவகன் மறுநாள் விரைந்து தன் கருமமாகிய நாடு காவலைக்கொள்ளும் காலம் அண்மியதைக் கந்துக்கடனுக் குக் குறிப்பாக உணர்த்தித்தோழரும் பிறரும் சூழத் தான் வந்த வழி தெரியாது வணிகன் போல வேடங்கொண்டு அத்தலைநகரை விட்டுப் புறப்பட்டுச் சென்றான். சீவகன் எங்கே சென்றான்
          
          
          அறம் வென்றது 
மாமன் ஊர் வந்தான்:
  வணிகனாகிக் குதிரை ஏறிச் சென்ற சீவகனும் அவனைச் சேர்ந்த மற்றவரும் எங்குச் சென்றார்கள்? நேரே சீவகன் தன் மாமன் கோவிந்தராசன் இருந்து அரசு செய்யும் விதய நாட்டுக்கு விரைந்து சென்றான். அவன் செல்லும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/119&oldid=1484024" இலிருந்து மீள்விக்கப்பட்டது