பக்கம்:சீவகன் கதை.pdf/124

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறம் வென்றது

123


கோவிந்தராசன் தன் மகள் இலக்கணையின் அழகும் அறிவும் பிறவும் கூறி அவளைக் கொள்ள வழியும் சொன்னான். வானிலே ஒரு திரிபன்றியை அமைத்து அதை வீழ்த்துபவனே அவள் கணவனாவன் என்று முரசறைவித்தான் அவன்; அஃது அந்தப் புறநகரிலே நடக்க இருப்பதால், 'அனைவரும் விழாவுக்கு வருக!' என அழைத்தான். இலக்கணையின் அழகைப்பற்றி முன்னமே அறிந்திருந்த அரசர் கூட்டம், விரைந்து கோவிந்தராசன் இருந்த இடம் வந்து சேர்ந்தது. கட்டியங்காரனும் கோவிந்தராசன் அழைப்புக்கு இணங்கி வந் து சேர்ந் தான். ஒவ்வொரு மன்னரும் இலக்கணையின்மேல் கொண்ட தணியாக் காதலால், திரிபன்றி எய்ய முயன்றனர். அவர்தம் முயற்சிகளையும் தோல்வியையும் தேவர் அழகுபடக் காட்டுகின்றார். அரசர் பலர்— ஒவ்வொரு நாட்டு மன்னராக - ஒருவர் பின் ஒருவராக வந்து முயன்று மாட்டாராய்த் தோற்றுச் சென்றனர்- நாட்கள் ஆறு கடந்துவிட்டன. ஒவ்வொரு மன்னரும் தோற்ற விந்தையை வேடிக்கையாகக் தேவர். அவர்தம் நிலையை, காட்கின்றார் ‘நல்லவள் வனப்பு வாங்க நகைமணி மாலை மார்பர் வில்லன்றே உவனிப் பாரும் வெங்கணை திருத்து வாரும் சொல்லுமின் எமக்கும் ஆங்கோர் சிலைதொட நாள்என் பாரும் பல்சரம் வழங்கு வாரும் பரிவுகொள் பவரு மானூர்.' (2179) என்று எடுத்துக் காட்டுகிறார் தேவர். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றும் திரிபன்றியை வீழ்த்த முடிய வில்லை. நாள் ஆறு கழிய, அனைவரும் செய்வதறியாது நின்றனர். சீவகன் தோற்றம்: அரசர் அனைவரும் தமக்குள் ஆற்றாராய் அலமந்து நின்ற அதே வேளையில் சீவகன் யானைமேலேறித் தோழ ரும் சேனையும் சூழ அவ்விடம் வந்து சேர்ந்தான். சீவகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/124&oldid=1484540" இலிருந்து மீள்விக்கப்பட்டது