பக்கம்:சீவகன் கதை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிகின்றது. அனைவருக்கும் சிறப்புச் செய்யும் அண் ணல் சீவகன் தனக்கும் பயனளிப்பான் என்று அவள் கருதினாள் போலும்! அவள் தன் காதலையெல்லாம் ஓலை யில் தீட்டினாள்; தானே தன் தோழியென நடித்தாள்; சீவகன் முன் சென்று ஓலையை நீட்டினாள். ஓலையைக் கண்ட சீவகன் அவளையும் உணர்ந்துகொண்டான்; அவளது முன்னை நிலையையும் நினைத்தான். அவளது பாடலும் ஆடலும் அவன் உள்ளத்தைப் பிணித்தன. அவளது ஆடல் பாடல் அழகின் வழிச் சீவகன் சில காலம் வாழ்ந்தான் என்று காட்டுகின்றார் தேவர். மேலும், அவன் ஆட்சியின் சிறப்பையும் வாழ்வின் செம்மையையும் தொடர்ந்து காண்போம். விசையை துறவு: தன் உரிமை நாட்டின் தலைமை எய்திச் சீவகன் ஆட்சி புரிந்து வருவானானான். அவன் ஆட்சி நலத்தைக் கண்ட விசையை மகிழ்ந்தாள்; செய்ய விரும்பிய தானங் கள் பலவற்றையும் செய்தாள்; சீவகன் பிறந்த சுடுகாடு சுடுகாடாகக் கிடவாதபடி அதைச் சீராக்கினாள்; கோயி லெடுப்பித்தாள்; அங்கு நாடோறும் பிள்ளைகளைப் பால் உண்பிக்க ஏற்பாடு செய்தாள்; தன்னை வணங்கிய சுனந்தையைத் தழுவிப் போற்றினாள்; சீவகன் மனைவியர் எண்மரும் தன் அடி வந்து பணிய, 'உலகாளும் சிறு வரைப் பெற்றுச் சிறப்பீர்களாக!' என வாழ்த்தினாள்; அனைவரையும் வாழ்த்திப்பின் சீவகனை அருகழைத்தாள். அருமந்த மைந்தன் அருகிலிருக்க, விசையை முன்பு தான் சச்சந்தனோடு துய்த்த இன்பநாள் தொடங்கி அன்று வரை வாழ்ந்த விதத்தையெல்லாம் எடுத்து விளக்கினாள்; அவன் தந்தை காம வசத்தனாய காரணத் தால் உண்டான தீங்கையெல்லாம் விளக்கி, சீவகன் அத்தகைய காமத்தை அஞ்சி விலக்கிக் காக்க வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/136&oldid=1484167" இலிருந்து மீள்விக்கப்பட்டது