பக்கம்:சீவகன் கதை.pdf/147

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'வானவர் மலர்மழை சொரிய மன்னிய

    ஊன்இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன் 
    தேன்இமிர் தாமரை திளைக்கும் சேவடி 
    கோன்அமர்ந் தேத்திய குறுகி னுன்அரோ.' என்று தேவர் பாராட்டுகின்றார். பின்பு எதிர் இறைவனை நோக்கிப் பணிந்து பலவா று நின்றான் சீவகன். இறை ஒளி பெற்றார் பெறும் பல்வேறு நிலைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சமய நெறி முறைப்படி அழகழகாக அறுதியிட்டுக் காட்டுகின்றார் தேவர். தம் சமய உண்மையினையும் உயர்ந்த நெறிகளை யும் ஆங்காங்கே சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கின் தேவர், இறுதியில் சீவகன் துறவு நிலையில் வைத்துத் தம் சமய நெறியின் உச்சியில் அமைந்துள்ள தூய துறவு நிலையையும் பலவாறு விளக்குகின்றார். காம நூல் எ என் கற்று வந்த இச்சிந்தாமணி, இறுதியில் சமய நூல் போன்று திகழ்கின்றது. ஆம். இறைவனோடு ரண் டறக் கலக்கும் இன்ப வாழ்வுக்கும் மணமென்பது தானே பெயர்? அம்மணம் இரண்டறக் கலந்த பின் என்றும் பிரியாத பேரின்பமணமாகும். சீவகன் இறையொளியில் மூழ்கி, அவ்வின்ப வாரிதி நோக்கிச் சென்றுகொண்டே யிருந்தான். சீவகனோடு நந்தட்டனும் தோழன்மாரும் பிறருங்கூட அவன் பெருநெறி பற்றிச் சென்றார்கள்.
  தெய்வ நெறி பற்றிய சீவகன் வாழ்வு சிறந்த பற்றற்ற துறவு வாழ்வாய் அமைந்தது. 'சீவக சாமியீரே' என்று அன்னை முதலிற்கண்டு அழைத்த அந்தச் சொற் சீவகன் இறைமைத் தன்மை பெற்றான். அவன் பெருநெறி பலரும் தொழத்தக்க நிலையினை அடைந்தான். அவ்வாறு அவன் பெற்ற பெருநெறி போற்றியவர்களுள் சேணிகர் ஒருவரையும் கொண்டு வந்து காட்டுகின்றார் தேவர். அச்சேணிகரை உத்தமச் சுதாக்களுள் ஒருவர் என்பர் சைனநூலோர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/147&oldid=1484091" இலிருந்து மீள்விக்கப்பட்டது