பக்கம்:சீவகன் கதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும்

45 பற்றி எண்ணினான். உண்மையில் மறைந்து கிடக்கும் தானே அந்நிரை மீட்கத் தகுதியுடையவன் என அவன் உள்ளம் சுட்டிக் காட்டியிருக்கும். ஆம். இன்று மறைந் திருந்தாலும், அரசு கட்டிலில் இருக்க வேண்டியவன் தானே அவன்? ஆகவே, நிரையை மீட்க வேண்டிய பொறுப்பு அவனைச் சார்ந்ததுதானே? இவ்வாறெல்லாம் எண்ணியிருக்கும் அவன் உள்ளம். உடனே அவன் வாய் ஒரு சபதம் செய்தது. 'நிரை மீட்டுக்கொண்டு வாராவிட் டால், யான் கட்டியங்காரனைப் போலப் பழிகாரன் ஆவேன்!' என்றான். இவ்வாறு சூளுரைத்த சீவகன், உடனே தேரேறிப் பசுக்கூட்டங்களை மீட்கப் புறப்பட் டான். வந்த தூரத்தே சீவகன் தேரேறி வருவதை வேடுவர் கண்டனர். அவர்களுள் முன் சோதிடம் கூறிய அந்த முதியவனும் இருந்தான். அவன் தான் கூறிய அத் தனித் தேரான் வனாக இருக்குமென்று எச்சரித்து, பசுக் கூட்டங்களை விட்டு உடனே காட்டிடை மறைந்து செல்ல வேண்டும் என வற்புறுத்தினான். எனினும், வேடுவர் அவன் சொல்லைக் கேளாராய், ‘பசியின் இரை கவ்விய நாகமே போல'ப் பசுக்கூட்டங்களை விட்டாரில்லை; சீவகனையெதிர்த்துப் போராடத் துணிந்தனர்; துணிந்து, 'அரசனது பெரும்படையை வென்ற எங்க ளோடு போருக்கு வருபவர் பிழைக்க மாட்டார்; எனவே. வருபவர் திரும்பிச் செல்லல் நல்லது,' என்று ஆரவாரஞ் செய்தனர். ஆனால், சீவகனும் அவனைச் சேர்ந்தாரும் திரும்பிச் செல்லாது ஆர்த்தனர். அது கண்டு வேடரும் ஆர்த்தனர். எனினும், சீவகனது வருகையினாலே அவர் கள் கருடனது சிறகொலியினால் வலியிழந்த பாம்பென மறத்தைக் கைவிட்டனர். வலைப்பட்ட கோழி போலச் செயல் குறைந்தனர்; எனினும், அதைப் புறத்தே காட் டாராய்ச் சீவகன்மேல் அம்பு மாரியைச் சொரிந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/46&oldid=1484533" இலிருந்து மீள்விக்கப்பட்டது