பக்கம்:சீவகன் கதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சிவகன் கதை

சீவகனே, அவற்றையெல்லாம் தடுத்து அவர்களை நோக்கிச் சென்றுகொண்டேயிருந்தான்.

      (பசு  மீட்கச் சென்ற சீவகன் உள்ளத்தே அறம் 

நிறைந்து நின்றது. வேடரோ, அறத்தையும் மறத்தை யும் ஒரு சேரக்கைவிட்டனர்.என்றாலும்,அவ்வேடருக்கு

 எனவே,சீவகன் வேடரைக்கொல்ல நினையானய், அவர்கள் விட்ட அம்பையெல்லாம் விலக்கி, அவர்கள்மேல் அம்பு விடாது, அவர்களைத் துரத்திக்கொண்டே சென்று,பசுக்கூட்டங்களை அவர்களிடையினின்றுபாது காவலாகப் பிரித்துவிட்டான். தனித்து விடப்பட்ட வேடுவர்கள், தப்பினதே போதும் என்ற எண்ணத்தால் தளர்ச்சியுற்றவராய்க் காட்டுக்குள் 'மைந்நூறு வேற்கண் மடவார் மனம் போல,' (453) மறைந்துவிட்டார்கள். சீவகனோ, வெற்றி வீரனாய் விளங்கினான்.)                         
                                                    

*வாள்வாயு மின்றி வடிவெங்கணை வாயு மின்றிக் கோள்வாய் மதியம் நெடியான்விடுத் தாங்கு மைந்தன் தோள்வாய் சிலையின் ஒலியால்தொறு மீட்டுமீள்வான் நாள்வாய் நிறைந்த நகைவெண்மதி செல்வ தொத்தான்.'.

                  (454).
 என்று ஆசிரியர் அவன் நிரை மீட்ட திறனைப் பாடு கின்றார்.)                                         
                                           ஆயர் குடி மகளிரும் மைந்தரும் தத்தம் நிரைகள் மீட்கப்பட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்து பாராட்டிய அந்த நிலையிலே, கட்டியங்காரனும் இச்செய்தி அறிந் தான்; தன்படை தோற்ற பின் தான் ஒன்றும் செய்யாது நிற்கையில் வேறொருவன் சென்று வெற்றி பெற்றான் என்பதை எண்ணி வருந்தினான்; வெகுண்டான். இங்குக் கட்டியங்காரனை 'நாளுற்றுலந்தான்' (455) என்ற தொட ரால் குறிக்கின்றார் தேவர். ஆம். அவன் நாள் முடியும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/47&oldid=1484541" இலிருந்து மீள்விக்கப்பட்டது