பக்கம்:சீவகன் கதை.pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

இராசமாபுரத்தே

}}

தத்தையின் தோழியரெல்லாரும், 'இவனே தத்தைக்க ஏற்றவன்!' என்று தத்தமுள் எண்ணி, 'இவன் வீணைப் போரில் வெற்றி பெற்றுச் சிறக்க!' என்று வாழ்த்தினர் தத்தையோ, சீவகனைக் கண்ட அளவில் தன் கருத்திழந் தாளாய், அவனையே நோக்கி, அவன்வழித் தன் உளத்தை ஓடவிட்டு, ஒன்றுஞ்செய்ய ஆற்றா நிலையில் இருந்தாள். அந்நிலையில் அவள்,

யாவனே யானு மாக; அருநிறைக் கதவம் நீக்கிக்
காவலென் நெஞ்சம் என்னும் கன்னிமா டம்பு குந்து
நோவஎன் னுள்ளம் யாத்தாய்; நின்னையும் மாலை யாலே
தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக என்றாள்.' (714)

வீணையில் தோற்றாள், வாழ்விலே வென்றாள்: இந்நிலையில் சீவகன் யாழ் வாசிக்கப் புகுந்தான். வீணாபதியோ, நல்ல யாழைத் தவிர மற்றவற்றை யெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்தாள். சீவகன் அவற்றின் குற்றங்களையெல்லாம் முறைமுறையே கூறி ஒதுக்கிக் கடைசியில் கொடுத்த நல்யாழை ஏற்று வாசிக்கத் தொடங்கினான். அவன் பாடிய சிறப்பைத் தேவர்,

'குரல்குர லாகப் பண்ணிக் கோதைதாழ் குஞ்சி யான்றன்
விரல்கவர்ந் தெடுத்த கீதம் மிடறெனத் தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார்; சோர்ந்தன புள்ளும் மாவும்;
உருகின மரமும் கல்லும்;ஓர்த்தெழீஇப் பாடுகின்றான்.'723)

'

எனப் போற்றுகின்றார். ஆம். அவன் பாட்டினைக கேட்டு மண்ணவர் மட்டுமன்றி, விண்ணவரும் பாவை போன்று அசைவற்று நின்றனர். அவன் பாடலைக் கேட்டுத் தன்னை மறந்திருந்தவளாகிய தத்தை, பின்பு பாடத் தொடங்கினாள். முன்னமே தன்னை அவனுக்கு உரிமையாக்கிவிட்ட தத்தை, வீணை வழி வெற்றி பெறு வாளோ?'விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/60&oldid=1484275" இலிருந்து மீள்விக்கப்பட்டது