பக்கம்:சீவகன் கதை.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இராசமாபுரத்தே

அறிந்ததையும் எழுதி, மேலும் அவர்கள் சிறக்க வாழ் வேண்டுமென வாழ்த்தியிருந்தான்; மேல் நடக்க வேண் டிய எ தற்கும் தான் உதவுவதாகவும் குறித்திருந்தான். சீவகன் அக்கடிதத்தையும் பொருள்களையும் தத்தை யிடம் காட்டினான். அவர் தம் காதல் வாழ்வு காலத்தை வென்றுகொண்டே சென்றது. வசந்த காலம் :

  காதல் வாழ்வுக்குச் சிறந்த காலம் இளவேனிற்கால மாகிய வசந்தமாகும். காதல் வாழ்வில் சிறந்த சீவகனும் தத்தையும் அவ்வசந்த காலத்தை நன்கு துய்த்தனர். எனவே, தேவர் அவ்வசந்தச் சிறப்பை நன்கு பாராட்டு கின்றார். சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் அந்த நாளில் காமன் போற்றும் கவின் நன்கு விளக்கப்படு கின்றது.
  காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
  மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசைமுன்னி 
  ஆசறற நடக்கு நாளுள் ஐங்கணைக் கிழவன் 
  வைகிப்்
  பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப் பருவம் என்பது தேவர் வாக்கு. அத்தகைய வசந்தத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் பல. அப்பாடல்களிலெல் லாம் இயற்கையழகும் காதலர் வாழ்வும் நன்கு காட்டப் படுகின்றன. பாடலும் பண்ணும், ஆடலும் ஆர்ப்பும் பொருந்திய வசந்த கால நகர், வானுலகை ஒத்திருந்த தாம். இத்தகைய இன்னிளவேனிலில் இளம்பெண்டிர் பலர் கூடி வெவ்வேறு விளையாட்டுக்களை விளையாடுவர். அவற்றுள் ஒன்று சுண்ண விளையாட்டுப் போலும்! சுண் ணம் என்பது, புனல் விளையாட்டு முதலிய வசந்த விளை யாடல்களில் பயன்படும் ஒரு வகை வாசனைப் பொடி யாகும்.

குணமாலையும் சுரமஞ்சரியும் :

  மகளிர் பலருள்ளே சிறந்தவர் போலும் குணமாலையும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/66&oldid=1484104" இலிருந்து மீள்விக்கப்பட்டது