பக்கம்:சீவகன் கதை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சீவகன் மறைந்தான்: சீவகன் கதை சீவகன் சிறைப்பட்டுச் செல்வதைப் பதுமுகன் முத லாய அவன் நண்பர் பலர் கேட்டறிந்தனர்; உடனே தம் படைகளைத் திரட்டினர்; சீவகனைப் பற்றிச் செல்லும் கட்டியங்காரன் மைத்துனனாகிய மதனனையும் அவனைச் சேர்ந்தோர்களையும் சிதைக்க முயன்றனர். சீற்றமிக்க சொல்லும், சொல்வழிச் செயலும் அவர்களிடம் தோன்ற லாயின. அவர்கள் ஒருபுடை இவ்வாறு படை தொடுக்கத் தம்மைச் சித்தம் செய்துகொண்டிருந்தனர். பல அதே வேளையில் தனிமையில் அந்தப்புரத்திருந்த காந்தருவதத்தையும், தன் கணவனுக்கு உற்ற கொடு மையை அறிந்தாள்; வருந்தினாள்; வரந்தரு விஞ்சை நாட்டுத் தெய்வங்களையெல்லாம் நினைத்தாள். அத்தெய் வங்கள் அனைத்தும் இராசமாபுரத் தெருக்களில் நிறைந் தன. தத்தை அவற்றை நோக்கித் தன் கணவனை மீட்குமாறு பணித்தாள். ஆம்.ஒரு புறம் உற்ற நண் பரும் மறு புறம் பற்றின் மனைவியும் தன்னைக் காக்கத் துணிந்து செய்யும் செயலைச் சீவகன் சிந்தித்துப் பார்த் தான். இந்த நிலையில் தத்தையின் மூலம் ஓர் உண்மையை உணர்த்துகின்றார் தேவர். தெய்வங்களை அழைத்துத் தன் கணவனை மீட்க நினைத்த காரிகை, அது சரியா என எண்ணிப் பார்க்கின்றாள். தன் முயற்சியால் கணவன் 'வெற்றி பெறுவானேயாயின், அவன் ஆண்மைக்கு இழுக்கு உண்டாகுமே என்று இடித்துக் காட்டிற்று அவள் உள்ளம். இந்த உள்ளத்து அலை எழுப்பிய தேவர்தம் சிந்தை, கம்பரது 'சொல்லினாற்சுடுவேன்; அது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசென். னேன்,' என்ற சீதையின் வாக்காய் வெளி வருகின்றது. கணவனுக்கு மாசு உண்டாகுமே என்று எண்ணிய of F.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/77&oldid=1483968" இலிருந்து மீள்விக்கப்பட்டது