பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனகமாலையார் இலம்பகம்125



மாட்டாள்” என்று பாராட்டினார்கள். சதி அனுசூயை என்று ஏன் சொன்னார்கள் என்று தெரியவில்லை.”

“அப்புறம் அவன் தருமமே செய்ய முடியவில்லை. அவள் கருமமே வெற்றி கொண்டது; அவனுக்கும் அவள் கருமம் செய்தாள்” என்று பேசி இந்த மாதிரி விஷயங்களுக் கெல்லாம் கடன் வைக்கக் கூடாது என்று அவனுக்கு உணர்த்தினான். பின் அவனை விட்டுப் பிரிந்தான்.


7. கனகமாலையார் இலம்பகம்

அவன் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாடு அடைகின்றான் என்றால் இடையில் ஏதாவது ஒரு காடு இடையிட்டது; அவன் நடைப் பயணத்துக்கு யாராவது சோணகிரி பேச்சுக்குத் துணை கிடைத்து வந்தான்.

இப்பொழுது கிடைத்தவன் இந்த நாட்டுத் தத்துவ நூல்களை அதிகம் படித்துவிட்டுத் தன்னடக்கம் கொண்டவனாக விளங்கினான். கிழக்கிலிருந்து மேற்குச் செல்லக் கூடிய தத்துவங்களில் முக்கியமானது புலனடக்கம்; இதை அடக்கி விட்டால் உலகத்தையே வென்று விடலாம்; அடுத்த உலகத்துக்கும் பதிவு செய்து வைக்கலாம் என்பது போன்ற சிந்தனைகள் அவனிடம் குடி கொண்டிருந்தன.

விஞ்ஞானம் வளராத காலம்; அதனால் இந்த ஞானங்கள் அவர்களிடம் மிகுந்து இருந்தன. ஒருவகையில் இந்தத் தத்துவங்கள் தன்னைக் காத்துக் கொள்ளப் பயன் பட்டன. கிடைத்ததைச் சுருட்டிக் கொள்ளாமல் விரட்டி அடிக்கும் நல்லியல்புக்குத் துணை செய்தன.

இந்தத் தத்துவ மேதை ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டான். அவள் தன் பெயர் அநங்கமா வீணை என்றாள்; கொஞ்சம் சுமாராக இருந்தாள்;