பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரமஞ்சரி இலம்பகம்153



“பந்துமட்டும் தெருவில் வந்து விழாமல் இருந்தால் நாம் சந்தித்திருக்க முடியாது” என்று அவன் பூப்பந்துக்கு நன்றி தெரிவித்தான்.

அங்கே அவள் விளையாடுவதற்குப் பந்து கிடைக்க வில்லை; ஊடலில் அவனை வைத்து விளையாடினாள்.


9. சுரமஞ்சரி இலம்பகம்

அடிபட்ட மான் நொண்டிக் கொண்டே நடந்தது; காமன் அம்பினால் துளைக்கப்பட்டு வேதனை தாங்க முடியாமல் குணமாலையின் உயிர்த்தோழி சுரமஞ்சரி மோனத்தவம் செய்து கொண்டிருந்தாள். அசுவனி என்ற அந்த யானை மீது அவளுக்கு அடங்காத கோபம். போயும் போயும் இந்தக் குணமாலைதானா அதன் கண்களுக்குப் புலப்படவேண்டும். அது முரட்டு யானை மட்டும் அல்ல; குருட்டு யானையும் கூட தன்னையும் அப்படித் துாக்கி எறிந்திருந்தால் அவன் வந்து தாங்கி இருப்பானே என்று எண்ணிப் பெருமூச்சு விட்டாள் அவள்.

கன்னிமாடத்தில் இதுபோல் அடிபட்ட மான்கள் பலர் அவளுக்குத் துணையாக இருந்தனர். காதலிலே தோல்வி அடைந்தவர் சரண் புகும் சரணாலயமாக இருந்தது. தனக்கு என்று அமைத்துக் கொண்ட அந்தக் கோட்டை அதன் ஒட்டை வழியே பல நோயாளிகள் வந்து அமைதி தேடினர்; சூடுபட்ட பூனை பால் குடிக்க அஞ்சுகிறது. பால் விருப்புதான்; இனிப்புதான்; என்றாலும் ஒரு முறை வாய்வைத்துக் குடித்து அது சூடுபட்டு விட்டது. அதே மனநிலையில்தான் சுரமஞ்சரி அந்த மாடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் இருந்தால் அந்தச் சூழ்நிலை அவளுக்குப் பருவ நினைவுகளைத் துண்டியது. அவள் தந்தை ஒரு