பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180சீவக சிந்தாமணி



11. பூமகள் இலம்பகம்

களத்தில் வீரர்களுக்குத் தலைமை தாங்கிய விசயனும், உலோகபாலனும் சீவகன் அரசு ஏற்கும் விழாவிலும் பங்கு ஏற்றனர். கலுழவேகன் நேரில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அவன் பிரதிநிதிகளை அனுப்பி விழாவைச் சிறப்பித்தான்.

நாடு சுதந்திரம் அடைந்தது. “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடி ஆரவாரித்தனர்.

சுதந்திரம் பெற்று விட்டால் மட்டும் போதாது; இந்த நாட்டைச் செம்மையுறக் காக்கும் பொறுப்பினை உணர்ந்தான். தேர்தல்கள் என்று வைத்து மக்கள் பிரதிநிதிகளை உட்காரவைத்து அவர்கள் நாட்டுக்கு ஆவன செய்வது தக்கது என்றாலும் அந்த முறைகள் அக்காலத்தில் இடம் பெறவில்லை என்பதால் இவனே தக்கவர்களை நியமித்து ஆட்சியைச் செம்மைப்படுத்தினான்.

நாடு நலமுற விளங்க வேண்டும் என்றால் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் தேவை என்பதை உணர்ந்து இவற்றைப் பெறத்தக்க வழிகளைத் தேடினான்.

உட்பகை வெளிப்பகை நேராதபடி தக்க காவலரை அமைத்துச் சட்டத்தை ஒழுங்கு படுத்தினான்; நீதியும் நேர்மையும் மக்கள் நல்வாழ்வும் அவன் பெரிதும் போற்றினான்.

தெய்வ நண்பனான சுதஞ்சணன் வந்து வாழ்த்துக் கூறினான்.

தன் மண்மீது கால் வைப்பதில் அவன் தறுகண்மை கொண்டான்; சித்திர மண்டபத்தில் கொலு வீற்றிருந்து ஆட்சி செய்தான் என்றாலும் அவனை ஆளாக்கி வீரன்