பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36சீவக சிந்தாமணி



அவன் எதிர்பார்த்தபடியே வித்தியாதர நாட்டு வாலிபன் ஒருவன் வித்தியாசமான உடையில் தன் முன் வந்து தோன்றினான்.

“ஐயா! எம்மினும் நீர் வித்தியாசமாக இருக்கிறீரே இந்தத் தீவின் தலைவரோ நீர்?” என்று கேட்டான்.

“வித்தியாதரன் யான்; விஞ்சையர் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன்” என்றான்.

“நீயும் என்னைப்போல் கலம் கவிழ்த்துவிட்டுக் கலங்கி நிற்கிறாயா?” என்று கேட்டான்.

“கலங் கவிழ்ந்து நிலம் தேடி வந்திருக்கின்ற உன் அவலம் துடைக்க வந்தேன்” என்றான்.

“என் மனைவி விரதங்கள் கொண்டவள்; வெள்ளிக் கிழமை தோறும் தவறாமல் கோயிலுக்குச் சென்று வருவாள். அவள் செய்த நல்வினைதான் என்னைக் காத்தது” என்றான்.

“மனைவியை மதிக்கின்ற அந்த மதி நலம் தான் உன்னைக் காத்தது. ஏதோ சில அதீத நன்மைகளை அடையவும் நீ இங்கே வந்து சேர்ந்திருக்கலாம் அல்லவா” என்றான் வந்தவன்.

“கையில் காசு இல்லாமல் யான் இனி என்ன செய்ய முடியும்; வக்கு இல்லாத என்னை யார் அக்கரையோடு கவனிப்பார்கள். ஆள் வழக்கற்ற இந்த அருஞ்சுரத்தில் நீள் வடிவம் உடைய உன்னைக் கண்டதே யான் செய்த தவம்” என்றான்.

“கவலைப்படாதே, இழந்த பொருள் ஓங்கவும், உழந்த துன்பம் நீங்கவும் யான் உதவுவேன்; என்னோடு வான் வழியே வா; என் தலைவன் முன் உன்னைக் கொண்டு சென்று சேர்ப்பேன்; அவன் உனக்கு எல்லா நன்மையும்