பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்53



கெளரவமான இடத்தில் அமரவையுங்கள், சரிகை வேட்டி தலைப்பாகைகள் பணம்படைத்தமைக்கு அடையாளங்கள்; அவர்களை எனக்குப் பின்னால் அமரச் செய்யுங்கள்; அரச குமாரர்கள் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்; அவர்களுக்கு என்று ஒரு தனியிடம் விட்டு வையுங்கள்; இசை வல்லவர்கள் நாட்டியக்காரர்கள் அவர்கள் எங்கு உட்கார வைத்தாலும் கவலைப்பட மாட்டார்கள்; நிச்சயம் அந்த மேடையில் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பார்கள்; அவர்களுக்குக் கொஞ்சம் புகையிலை வெற்றிலை வாங்கி வையுங்கள்; மென்று கொண்டே குதப்புவார்கள்; வெளியிலே அங்காடி வைக்க இடம் ஒதுக்கி வையுங்கள்; வெளி ஊர்க்காரர்கள் தங்குவதற்கு விடுதிகளைக் கட்டி வையுங்கள்; சோலை உலாவுதற்கு வசதிகள் செய்து வையுங்கள்; இராசமாபுரத்துப் பேரழகு கண்டு அவர்கள் பேசிக் கொண்டே செல்ல வேண்டும்.”

இவ்வாறு அடுக்கிக் கொண்டே சென்றான். எப்படியும் இந்த விழா நடத்துவதற்கு இடம் கொடுத்ததே பெரிது எனச் சீதத்தன் பெருமகிழ்வு கொண்டான். கொண்டு வந்த பொருளில் பெரும்பங்கை மண்டபம் கட்டுவதற்கும், வசதிகள் செய்து தருவதற்கும் வாரி இறைத்தான். யானைகளில் செய்தி அறிவிப்போரை ஏற்றிப் பறை அறிவித்துச் செய்தி செப்பினான். அரசன் கட்ட யங்காரன் பல நாட்டு அரசர்களுக்கும் ஆளை அனுப்பி ஒலை போக்கினான்.

பெண்டிரும் ஆண்மை விரும்பிப் பேதுறும் பேரழகியை யாழிசையில் வென்று மணக்க விரும்புபவர் வருக! இவ்விழாவிற்கு வருகை தருக! என்று செய்தி செப்பினர். போட்டியில் பங்கு கொள்ள வந்தவர் சிலரே எனினும் பாடியதைக் கண்டு மகிழ வந்தவரே