பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66சீவக சிந்தாமணி



வதற்கு ஆர்வம் காட்டுவர்; மன்னவன் மகள் மாற்றாள் ஒருவனுக்குப் போவதை உங்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது; இது மன்னர் மரபுக்கே ஒரு அறை கூவல் ஆகிறது.”

“வரலாறு காணாத நிகழ்ச்சி இது. இராமன் சீதையை மணந்தான் என்றால் அவன் வில்லை வளைத்த பின் அவளை வளைத்தான்; அருச்சுனன் இலக்கை வீழ்த்தி விட்டே தன் இலக்கை அடைந்தான்; நளன் காதலித்தவளுக்குத் தன் கழுத்தை வளைந்து கொடுத்தான். சுயம்வரம் என்றால் வீரம் அல்லது காதல் அடிப்படையில் இருக்க வேண்டும்; பாட்டுப்பாடினான்; அதற்காக அவளை அவன் மாலை இடுவது மரபுக்கு ஒவ்வாது.”

“முதலில் அவனை வென்று தொலைத்து விடுங்கள். பின் நீங்கள் என்ன செய்வது என்று யோசித்து முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது ஆள் அவனை முதலில் தூக்கி எறியுங்கள்; அதற்குப்பின் இங்கேயே ஒரு களம் அமைத்துத் தருகிறேன்; நீங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு வலிமை மிக்கவன் அவளை அடையலாம். வலிமையே வெல்லும் என்பது வாழ்க்கை நியதி, சிறிய மீனைப் பெரியமீன் விழுங்குகிறது; மானைப் புலிவேட்டை யாடுகிறது; தொழிலாளியை முதலாளி ஏய்க்கிறான். எளியோரை வலியார் வாட்டுவதுதான் உலக முறை நியதி முதலில் செயலில் இறங்குங்கள்.”

“இவனை எப்படி எதிர்ப்பது என்று யோசனை செய்கிறீர்களா, இவன் தனியாள்; நண்பர் உறவினர் யாரும் இல்லை; அவர்கள் எல்லாம் வாணிபத் தொழிலினர். சண்டை என்றால் அவர்கள் அங்கே மண்டை உடையும் என்று அஞ்சுவார்கள். அவர்கள் சிகப்பு மையைக் கண்டால் கூட சிப்பாய் என்று அஞ்சும் பீப்பாய்கள். இவனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; யாழ் எடுத்து மீட்டும் கை