பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80சீவக சிந்தாமணி



“தந்தையிடம் சொல்; அந்தத் தெருவழியே ஆடவர் யாரும் வரக் கூடாது; இதை அரசனிடம் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றாள்.

இந்தக் காலத்தைப் போலவே சிலவற்றைக் காசு கொடுத்தால் சாதிக்கும் காலமாக அது இருந்தது. அவள் தந்தை கட்டித் தங்கத்தைக் கொண்டு போய்க் கட்டியங்காரனுக்குத் தந்து அனுமதி வாங்கி வைத்தான்.

“ஒநாய்கள் வரக் கூடாது; அவற்றிற்கு வழிஇல்லை” என்று ஒரு பலகை மாட்டி வைக்கப்பட்டது. ஆடவரை உள்ளிருந்தவர்கள் சன்னல் வழியாக எட்டிப்பார்த்துக் கொள்ள முடிந்தது. அது மிகப் பழைய கட்டிடம்; அதில் சிற்பங்கள் செதுக்கி இருந்தனர். இரண்டு சிற்பங்கள் இருந்தன; கிழக்கையும் மேற்கையும் பார்த்தன; இது ஆண் இது பெண் என்று தோழி வேறுபடுத்திக் காட்டினாள்.

“சிற்பங்களில் கூடவா பேதம் இருக்க வேண்டும். இந்த ஆண் சித்திரத்தை அகற்றி விடு” என்று ஆணையிட்டாள்; மருந்துக்குக் கூட ஒரு மல்லிகைப்பூ அங்கு வைக்கப்படவில்லை.

அவர்களுக்குப் பொழுது போகாத நேரத்தில் “ஆண்கள் இல்லாமல் குழந்தை பெற முடியுமா? ஏன் பெற முடியாது. வழி என்ன?” இந்த மாதிரி நவீன ஆய்வுகளில் மனம் செலுத்தினர்.

தனக்கு என ஒதுக்கிவிட்ட திரை அரங்கில் அவள் கால் சலங்கை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஆட எழினியின் திரைகள் நீக்கப்படவில்லை. இது அவள் நிலை.

குணமாலை நிலை வேறு. யானை என்றால் அதற்கு மதம் பிடிக்கவில்லை என்றால் அது யானையே ஆகாது. அதுவும் அரசனின் யானை என்றால் அதிக மதம் பிடிக்க வேண்டும்; கட்டியங்காரன் யானை என்றால் அது கட்டுக்கு அடங்காது. அது யாரை வேண்டுமானாலும்