பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்துமாலையின் மனமாற்றம் மூத்துமாலை- அவன்தான் சிங்கக்குட்டி என்றும், விர சிங்கம் என்றும், பலே எம்டன்' என்றும் பல பேரால் பேசப்படும் பெருமை பெற்றிருந்த முரடன்- திடீரென்று அப்படி மாறிவிடுவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க 鑫斑芋莎· - ஆனால், ஆள் அடியோடு மாறிப்போனான். அது. அதிசயமாகப் பேசப்பட்டது எல்லோராலும். பின்னே பேசாமல் என்ன செய்வார்கள்? அத்து, வட்டாரத்துக்கே அது ஒரு அதிசயம், ஆனால் உண்மை: என்கிற ரகவிசேஷம் இல்லையா? - முந்திய தினம் இரவுவரை ஆசாமி நன்றாகத்தான் இருந்தான். அதாவது அவனது கல்யாண குணங்களை எல்லாம் ஒழுங்காகப் பெற்றிருந்தான். திருவிளையாடல்களை திவ்வியமாக நிறைவேற்றினான். மறுநாள் காலையில் அவன் முற்றிலும் மாறிப்போனான் என்றால்: இதில் ஏதோ கோளாறு புகுந்துவிட்டது என்றே எல்லோரும் கருதினர். அது என்ன கோளாறாக இருக்கும் என்பதில்தான் கருத்து வேற்றுமை. முத்துமாலைக்கு ஸ்க்ரு லூஸ் ஆகிவிட்டது: அவன் ஏதோ லேகியம் தின்றதிலே அவன் மூளையே பாதிக்கப்பட்டு விட்டது: பையனை மோகினி பிடிச்சு இப்படி ஆட்டுது! அவனுக்கு ஞானப் பைத்தியம். ஏதோ மர்மம் இருக்குது’- இப்படி எல்லாம். பேச்சுகள் பிறந்து அடிபட்டன. காலையில் எழும்போதே முத்துமாலை கலாட்டாவுக்கு ஆயத்தமாகத்தான் எழுந்திருப்பான். மனைவியோடு: