பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 101 சண்டை போடுவான். அதுக்கு உப்பு போதாது. இது வாய்க்கு. நல்லாவேயில்லை என்று பதார்த்தங்களை விசி அடிப்பான். தெருவில் போகிறவர்களை வம்புக்கு இழுப்பான். எவராவது முறைத்தால், உதை கொடுப்பான். அவனுக்கும்: அவனைப் போன்றவர்களுக்கும் கள்ளச்சாராயம் தினசரி ஒழுங்காகக் கிடைத்து வந்தது. அதைக் குடித்து விட்டுக் கூச்சல் போடுவது, தெருவில் ரகளை பண்ணுவது, முறைப்ப வர்களிடமிருந்து பணம் பறிப்பது, கிடைக்காரர்களையும் ஒட்ட ல்காரர்களையும் மிரட்டுவது, ஆசைநாயகியோடுஏசிப் பேசிக் கொஞ்சுவது இவை எல்லாம் அவன் திருவினை பாடல்களில் சில. அவனும் அவன் சகாக்களும் வம்புகள் வளர்ப்பதிலும், வீண் சண்டைகளை விலைக்கு வாங்கு வதிலும், எடுத்ததற்கெல்லாம் கத்தியை எடுப்பதிலும் சூரர்கள். அவர்கள் அனைவரிலும் சூரப்புலி முத்துமாலை. ஆகவே அவன் சிங்கம்! - x போலீஸ் வருகிறது என்றால் இந்தப் புலிகள் எப்படியோ மாயமாய் மறைந்து விடும். சில சமயம் அகப்பட்டுக் கொள்வதும் உண்டு. முத்துமாலையும் ஒன்றிரு தடவைகள் ஜெயிலுக்குப்போய் வந்தவன்தான். அவன் போக்கு. மாறவில்லை. அத்னாலேதான், ஒருநாள் ராத்திரி கலாட்டா செய்து விட்டு சிங்கக்குட்டியாய், துரங்கப் போனவன், விடிந்து எழுந்ததும் ஆட்டுக்குட்டியாய் மாறியிருந்ததை அறிய நேர்ந்ததும், அவனை அறிந்தவர்கள் அறியாதவர்கள், நண்பர்கள் எதிரிகள் எல்லோருமே, 'நம்பமுடியாத அதிசயம் இது என்று வியப்பு அண்டந்தார்கள். என்ன செய்வது நம்பத்தான் வேண்டியிருந்தது. 'முரடர் திலகம் முத்து மாலை சாதுவாக, தீமைகள் புரிய விரும்பாதவனாக அட்டூழியங்கள் செய்ய ஆசைப்: படாதவனாகக் காட்சி அளிக்க முன்வந்திருந்தான். 函一?