பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 c வல்லிக்கண்ணன் •. 'உங்களுக்குத் துக்கம் வரலேன்னு சொன்னால் பேசாமல் கிடங்களேன். மத்தவங்க துர்க்கத்தை ஏன் கெடுக்கணும்?” ஒன்று மனைவி எரிந்து விழுந்தாள் ஜயா ஞானப்பிரகாசம்: உமக்கு ஒரு கும்பிடு. உம்ம கொள்கைக்கு ஒரு கும்பிடு: நீரே நல்லவராக இரியும். அது போதும். தமக்கு அது கட்டுபடியாகாத பாலிசி என்பது நல்லாப் புரிஞ்சிட்டுது; அப்போ நம்ம பெண்டாட்டிகூட தம்மை மதிப்பது இல்லை. தெரிஞ்சுக்கிடும். கொட்டினால் தான் தேளு, கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்பாங்க, அது கரெக்ட் கேளு கொட்டமாட்டேன்னு விரதம் எடுத்துக் கிட்டுத் திரிஞ்சா அதைக் கண்டு ஜனங்க பயப்படமாட்டாங்க, பணய பதவி, அதிகாரம், அடாவடி, உடல்வலு, வெறி, கத்தி வகையறா- இதுகளுக்கு நம்மளவங்க பயந்து தடுங்கி, பக்தி செய்து பழகிப்போயிட்டாங்க. இதுகளில் எதுவும் இல்லாத வங்களை யாரும் மதிக்கிறது இல்லே. ஆமா, எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு: முத்துமாலையின் மனம் இவ்வாறு பேசியது. மது நாள் காலையில் அந்த வீடு அமர்க்களப்பட்டது. சஏய் புழுக்கமுண்டை: இத்தனை நேரம் என்னடி செஞ்சுக்கிட் கிட்டிருந்தே? காப்பி எங்கே?' என்று உறுமினான் அவன். அவன் என்னவோ சொல்ல வாய் திறக்கவும் அந்த வாய் மீதே ஓங்கி அறைந்தான். இனி மேல் ஐயா பழைய முத்துமாலை தான். இடையிலே அஞ்சு நாள் என் மனம் புதுசா மாறி யிருந்தது. இப்ப திரும்பவும் பழைய நிலைக்கே மாறி வந்துட்டுது. ஆமா, புத்தியாப் பிழை என்று கத்தினான். மறைத்து வைத்திருந்த கள்ளச் சாராயத்தைக் குடித் தான். இந்த அஞ்சு நாளும் ஐயா கிட்டே வாலாட்டின போடிப் பசங்களுக்கெல்லாம் வ ட் டி. யும் முதலுமாக கொடுக்கப்போறேன். இன்னிக்கு. முதல்லே அந்த சிங்காரம் பயலை பெண்ட் எடுத்துக்கிட்டு வாறேன் என்று மிடுக்காகக் கிளம்பினான் முத்துமாலை.