பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுக்கல் வாங்கல் கிரீத்திமதிநாதனுக்கு வாழ்க்கையில் உயர்வடை: வேண்டும் என்ற ஆசை இருந்தது. எப்படியாவது உயர்ந்து, நல்ல ஆத்தஸ்தை அடையவேண்டும் என்று எண்ணினான் அவன். சதா அதைப் பற்றியே கனவு கண்டு வந்தான். வாழ்க்கையில் உயர்வதற்கு வேண்டிய சந்தர்ப்பங்களும் வசதிகளும் எல்லோருக்கும் கிடைத்து விடுகின்றனவா என்ன? *சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பது தப்பு. நம்மைத் தேடி அவை வருவதில்லை. தமக்கு வேண்டிய வாய்ப்புகளை தாமேதான் தேடிக்கொள்ள வேண்டும் என்று அனுபவசாலி கள் சொல்கிறார்கள். உண்மை. ஆனாலும், அதற்குக்கூட ஒரளவு வசதியாவது இருக்க வேண்டுமே. பணம் என்கிற மூலாதாரத்தின் மேல் தானே மற்ற எதையும் அமைக்க முடியும்? - காந்திமதிநாதனோ, கையிலொரு காகமில்லை; கடன் கொடுப்பார் யாருமில்லை! என்று பாட்டுப்பாட வேண்டிய நிலைமையில் இருந்தான். அவன் தனக்குத் தேவையான சந்தர்ப்பங்களை சிருஷ்டித்துக் கொள்வது எப்படி? "யாராவது ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால்?இதுவே அவனுடைய எண்ணமும் ஏக்கமுமாக அமைந்தது. ஆனால் பார் அவ்வளவு பணம் கொடுப்பார்கள்? போண்டிப் பவலான அவனை நம்பிக் கடன் கொடுக்கவா செல்வர்கள் பணம் சேர்த்து வைத்திருந்தார்கள்? இல்லையே! அவனும் யாராரிடமெல்லாமோ கேட்டுப் பார்த்தான். உறவினர்களிடமும், சமூகப் பெரியார்களிடமும் கேட்டான், கடனாகத்தான். என்னை நம்புங்கள். எப்படியும் நான்