பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 22: பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். நான் சாகிறதுக் குள்ளே, என் உடம்புத் தோலைச் செருப்பாகத் தைத்துப் போட்டாவது எனது நன்றியைக் காட்டுவேன். தயவுசெய்து உதவி புரியுங்கள்’ என்று கெஞ்சினான். அவர்கள் சிரித்தார்கள். பணத்தின் மிடுக்கான தொனி அதிக - r. ஹெ ஹங்! ஏப், செருப்பு வேனுமானால் கடையிலே ரகம் ரகமாகக் கிடைக்கும் டேய், ஆனால், ஆயிரம்ரூபாய். அது பெரிய விஷயம் அப்பா கையை விட்டுப்போனால், கிளம்பி வருவது லேசான காசியமல்ல. உனக்குக் கொடுத்தால் அதை நீ எப்படித் திருப்பித்தர முடியும்? உன்னிடம் வீடா வாசலா, நிலமா நீச்சா?- எப்படியும் பற்றிக் கொள்ளலாம் என்று எண்ண? பேசாமல் எங்காவது வெங்காயக் கிட்டங்கி யிலே, மளிகைக் கடையிலே, அரிசி மண்டியிலே, ஜவுனிக் கடையிலே ஏதாவது வேலை பார்த்துப் பிழை, போ! பணத்தோடு தான் பணம் சேரும். நீ ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, ஏதேனும் முயற்சி செய்தால் கூட, அந்த ஆயிரமும் உன்னை விட்டுப் போய்விடும். போய் என்ன செய்யும் தெரியுமா? தொண்ணுற்றொன்பதாயிரம் ரூபாய் வச்சிருப் பானே, அவனை லட்சத்துக்கு அதிபதியாக மாற்றிப்போடும். புரியுதா? ஒழுங்காகப் பிழை தம்பி. உனக்கு ஏன் வீண் ஆசை எல்லாம்?- இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார்கள் சில பெரிய மனிதர்கள், காந்திமதிநாதன் யோசித்தான்: 'சமூகத்தில் என்னைப்போல் இருப்பவர்கள் ரொம்பப் பேர். திறமை, உழைப்புச் சக்தி, உழைத்து உயர வேண்டும் என்கிற ஆசை எல்லாம் இருந்தும் பாழாகப் போக வேண்டிய நிலைமை, காரணம் என்ன? பணம் இல்லை. நான் பணக்காரனாக வேண்டுமானால்-சீமான் எவனாவது தத்து புத்திரனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது, பணக்கார்