பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மு. வல்லிக்கண்ணன் விதவை எவளாவது ஆசை நாயகனாக என்னை அங்கேரிக்க வேண்டும். அல்லது பணப் படைத்தவனின் ஒற்றைத் தனிமகளின் கணவனாக மாறவேண்டும். அல்லது, புதையல் கிடைக்க வேண்டும். அல்லது. லாட்டரிப் பரிசு போன்ற அதிர்ஷ்டம் எதிர்ப்பட வேண்டும். இதில் எதுவும் எனக்கு கிட்டாது என்று நிச்சயமாகத் தெரிகிறது. இனி நான் என்ன செய்வது? யோசித்து யோசித்து மூளையைக் குழப்பிய காந்திமதி தாதனுக்குத் தெளிவு பிறந்தது. *மனிதர்களிடம் கடன்பெற . エ - » ,? முடியவில்லை. கடவுளிடம் கடன்வாங்க வேண்டியதுதான்! என்ற எண்ணமே அது. - இந்த நினைப்பு எழவும் அவனுக்கே சிரிப்பு பொங்கியது அவன் ரொம்ப நல்லவன். அதனால்தான் கடன் வாங்க விரும்பினான், கொள்ளை அடிக்க ஆசைப்படவில்லை. அவ்வூர் சிவன் கோவில் ரொம்பச் செயலான கோயில்’, ஏகப்பட்ட நிலம், நகைகள், தங்கம்- வெள்ளிப் பாத்திரங் கன், சாமான்கள் எல்லாம் உண்டு. உண்டியில் குடங்களின் மூலம் சேருகிற பணமும் திறையவே வரும். . நல்லவனான காந்திமதிநாதன் நகைகளையோ பாத்திரங் களையோ தொட விரும்பவில்லை. உண்டியல் குடத்திலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் கடனாக எடுத்துக் கொள்ளவே துணிந்தான். - வருஷத்துக்கு ஒரு முறைதான். பெரிய திருவிழாவுக்குப் பிறகு-உண்டியல் குடங்களைத் திறந்து, பணத்தை எண்ணி கணக்கில் சேர்ப்பது அக்கோயில் வழக்கம். அந்த ஆண்டில் உண்டியலைத் திறக்கும்தாள் இன்னும் வரவில்லை. ஆகையால் தனக்குத் தேவையான பணம் அதில் இருக்கும் என்று அவன் நிச்சயமாக நம்பினான். --