பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11: O வல்லிக்கண்ணன் வந்திருந்தாள். அவருடைய தோற்றமும், அவள் மீது பழுத்துத் தொங்கிய நகைகளும் அவர்கள் பணக்காரர்கள். -பெரும் பணக்காரர்கள் -என்று விளம்பரப்படுத்தின. உறவு கொண்டாடவும், சுக செளகரியங்கள் பற்றி விசாரிக்கவும், உண்மையை ஆராயவும் ஊரார்கள் வந்தார்கள் பிள்ளை அவர்களும் உயர்வு தாழ்வு பாராமல் எல்லோரிடமும் தாராளமாகப் பேசிப் பழகினார். "இந்த ஊரிலேயே இருந்தால் பிரயோசனமில்லை என்று எனக்கு நிச்சயமாகப் பட்டது. அதனாலே பட்டணத்துக்குப் போகலாமின்னு கிளம்பினேன் ரெயிலிலே ஒருவர் துணை எனக்குக் கிடைத்தது. அவர் கொழும்புக்குப் போவதாகச் சொன்னார். அங்கே அவருக்குப் பெரிய கடை இருப்ப தாகவும், உதவிக்கு ஆள் தேவை என்றும் சொன்னார். தான் வருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் கடையிலேயே கொஞ்ச நாள் இருந்தேன். நம்ம பக்கத்துக்காரர் உமையொரு பாகம் பிள்ளை என்று ஒருவர் தயவு எனக்குக் கிடைத்தது. ஆவர் பண உதவி சேய்தார். அதனாலே நான் சொந்த வியாபாரம் ஆரம்பித்து விட்டேன். பெரிய யுத்தம் வந்ததா? அப்டோ வியாபாரம் நல்ல பிடி பிடிச்சுது. இரண்டாவது புத்தமும் கைகொடுத்தது, சரி: சம்பாதிச்சது போதும்; தமக்கோ வயசாச்க; நம்ம ஊரிலேயே போய் வீட்டோடு வாசலோடு இருக்கலாம்னு நினைத்தேன். வந்துவிட்டேன்’ என்றார் அவர். கோயில் நிலைமை, ஊர் நிலைமை பற்றி எல்லாம் அவர் விசாரித்தார். சுவாமிக்கு விசேஷமாக ஒரு பூஜை நடத்து ஆசை என்று சொல்லி, ஏற்பாடுகள் செய்தார். அன்று. உண்டியலில் பெருந்தொகை செலுத்தினார் பிள்ளை. நூறு ரூபாய் நோட்டுகள் பல இருந்ததாக மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள்.