பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பு சோமுவுக்கு பக்தி முற்றியிருந்தது. சோமுவின் பக்தி, எங்கோ இருந்து உலகத்தை ஆட்டு விப்பதாகச் சொல்லப்படுகிற கடவுள் மீது நம்பிக்கை கொள்ளும்படி அவனைத் துண்டியதைவிட அதிகமாக, சுகானந்த அடிகளிடம் எல்லையில்லா நம்பிக்கை வைக்கும் படி செய்து வந்தது. அவனைப் பொறுத்தவரையில் சுகானந்த அடிகளே கண்கண்ட தெய்வம். அவரை அவன் உள்ளத்தால் வழி பட்டான். சுவரில் அவர் படத்தை மாட்டி வைத்து, தினத் தோறும் பூமாலை சாத்தி, வணங்கினான். அவர் எழுதிய நூல்கள் பலவற்றையும் பக்தி சிரத்தையோடு மீண்டும் மீண்டும் படித்தான். அவனுக்கு அவைதான் கீதை, உபநிஷத் எல்லாம். -

  • அடிகள் எவ்வளவு அற்புதமாக உயர்ந்த தத்துவங்களை எளிய முறையில் விளக்குகிறார், தெரியுமா? நமது சித்தர் களும் பிறரும் சாதாரண மக்களுக்குப் புரியாத பாஷையில் எவ்வளவோ சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றால் என்ன பிரயோசனம்? சுகானந்த அடிகள் கற்றாருக்கும் கல்லாதாருக்கும் ரொம்ப அழகாகப் புரியும்படியாக எழுதி யிருக்கிறார். பிரசங்கம் புரிகிறார். என்று சோமு அடிக்கடி வியந்து போவான்.

அடிகள் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. முன்வந்தவர்கள் காலம் காலமாகச் சொல்லி வந்ததைத் ఇ~&