பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 () வல்லிக்கண்ணன் தான் அவரும் கூறுகிறார். காமம், கோபம், பொறாமை, மண்ணாசை, பொன்னாசை, முதலியவைகளை துறந்து விட்டால்தான் மனிதன் ஆன்மீக உயர்வு பெறமுடியும் என்றுதானே இவரும் சொல்கிறார்?-இப்படி யாராவது பேசிவிட்டால் சோமுவுக்குக் கோபம் வந்துவிடும். ‘மடையர்கள்: மகானின் மதிப்பு இவர்களுக்கு எங்கே தெரியும் என்று முணுமுணுப்பான். அவர்களிடம் பேசிப் பயன் இல்லை என்று விலகிவிடுவான். சுகானந்த அடிகள் சொற்பொழிவு எங்காவது நடை பெறுகிறதா என்று தேடிப்போய் அதைக் கேட்டு தன் காதுகளைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரைவான். v. இதற்காக அவன் அலைச்சலையோ, பணச்செலவையோ, கால விரயத்தையோ பெரிது படுத்துவது கிடையாது. சோமுவை அறிந்தவர்கள் அவனை வெள்ளை வேட்டித் தம்பிரான் என்று கேலியாகக் குறிப்பிட்டு வந்தார்கள். "சுகானந்த அடிமை என்று கிண்டல் செய்தார்கள். அதை எல்லாம் அவன் காதில் போட்டுத் கொள்ளுவதே இல்லை. சுகானந்த அடிகளின் போன்மொழிகளைத் தன்னால் இயன்ற அளவுக்குப் பரப்ப வேண்டும் என்று அவன் ஆசைப் பட்டான். அவருடைக புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம் இந்தத் திருப்பணிகை அருமையாகச் செய்ய முடியுமே! எனவே, அவன் புத்தக வியாபாரத்தில் ஈடுபட் டான். அடிகளின் நூல்கள் அடிகள் விலாசத்தில்தான் கிடைக்கும் என்று அவன் தெரிய நேர்ந்தது. அவரே தனக்கெனத் தனி அச்சகம் நிறுவி, தனிப்பதிப்பகம் நடத்து கிறார் என்றும் அவன் அறிய முடிந்தது.