பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 219 விஷயங்களின் மதிப்பறிந்து புத்தகம் போடுவோர் கிடைக்காத காலம் இல்லையா இது? அதனால் தனது எண்ணங்களையும் எழுத்துக்களையும் அடிகளே புத்தக மாக்குவதற்கும், அவற்றை நன்கு பரப்புவதற்கும் நல்ல ஏற்பாடு செய்திருக்கிறார். போற்ற வேண்டிய காரியம்’ என்று சோமு எண்ணினான். அவன் எண்ணத்தைக் கேள்வியுற்ற நண்பன் ஒருவன் சிரித்தான். இதர நூல் வெளியீட்டார்களிடம் கொடுத்தால் பணம் சரியாக வராது; நிறையவும் கிடைக்காது. அவருக்கு ஒரு மார்க்கெட் உண்டு என்பது நிச்சயம். அதனால் அவர் நூல்களை அவரே வெளியிட்டு விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அவ்வளவு லாபமும் அவருக்கே கிட்டும். இதுதான் அவருடைய நோக்கம். சுகானந்தர் பக்க்ா பிசினஸ்மேன் என்று சொன்னான். சோமு வெகுண்டான். பிசினஸ் வட்டாரத்தில் பழகுகிற உனக்கு பிசினஸ் புத்திதான் இருக்கும். அடிகளை யும் உன்னைப் போலவே எண்ணிவிட்டாய். சுகானந்தர் இந்த அல்ப விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்" என்று வாதாடினான். நண்பன் பேசாமல் முறுவல் பூத்தான். பக்தி, நம்பிக்கை எனும் பெயரால் தன் கண்ணையும் அறிவையும் குருடாக்கிக் கொண்டு அலைகிறவனோடு வீண் வாக்குவாதம் ஏன் என்று அவன் நினைத்திருக்கலாம். அடிகள் பணத்தில் குறியாக இருப்பார்: சுயவிளம்பரத் தில் மிகுந்த கருத்து உடையவர் என்று ஒன்றிரண்டு பேர் அவனிடம் சொன்னார்கள். தங்களுடைய அல்ப குணங்களை அடிகள் மீது சாட்டுகிறார்கள் சின்ன மனிதர்கள் என்றே சோமு கருதினான். - அவன் சுகானந்த அடிகளின் நூல்களை அவரிடமே நேரில் பெற்று வந்தான். விற்பனை செய்வதில் ஆர்வம்