பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 232 தானே கொடுக்க வேண்டும்? அச்சமயத்தில் பணம் புரட்ட முடியாமலா போகும்? என்று அவன் நினைத்தான். அடிகளை சந்திக்கச் சென்றான் சோமு. புத்தக விற்பனை, ப்ற்றிய விவரமும் சொன்னான். அது சரி, விற்பனையான புத்தகங்களுக்கு உரிய பணம்' எங்கே?' என்று கேட்டார் சாமியார். ‘எல்லாப் புத்தகங்களும் விற்பனையானதும் பணம் மொத்தமாகக் கொண்டு வாறேன்’ என்றான் சோமு. ‘அப்படி ஏன்? இப்போ விற்றுள்ள புத்தகங்களின் விலையை இப்பவே கொடுக்க வேண்டியது தானே நியாம்? என்று வறண்ட குரலில் பேசினார் சுகானந்தர். சோமு தயங்கித் தயங்கிப் பேசினான். இப்ப கையிலே பணம் இல்லை, பணம் சேகரித்து..." - அவன் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்க அடி களுக்குப் பொறுமையில்லை. அவர் முகத்தில் கடுகடுப்பு பரவியது. சொல்லிலும் சூடு ஏறியது. புத்தகம் விற்ற பணம் எங்கே? நீ செலவு பண்ணிவிட்டே இல்லையா? என்றார். உறுமல்போல் ஒலித்தது. அது. அவன் மெளனமாக நின்றான். அவர் கடுமையாகப் பேசிக் கொண்டே போனார். அது என்ன பழக்கம்? யோக்கியப் பொறுப்பு வேண்டாம்? உன்னைப் போல் வித்துத்திண்ணிகள் பலபேரை நான் பார்த்தாச்சு. முதல்லே யோக்கியன் போல் நடந்து கொள்றது. யோகப் போக அமுக்கல், வேலையிலே ஈடுபடுறது. வியாபாரம் என்ற்ாலே நேர்மை குறைவான காரியம் ஆஎன்றாகிவிட்டது: