பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 வல்லிக்கண்ணன் அடிகளின் உரைகள் அற்புதப் பொன்மொழிகளாகப் படவில்லை சோமுவுக்கு. அடிகளா இப்படிப் பேசுவது? ககானந்தர் பேசவேண்டிய சொற்களா இவை? என்று. அவன் உள்ளம் பதைபதைத்தது. 'நீ என்ன செய்வையோ, எப்படிப் பணம் கொண்டு. வருவையோ, எனக்குத் தெரியாது. எனக்கு வேண்டியது, விற்பனையான என் புத்தகங்களுக்கு உரிய பணம் என்று. அடிகள் கறாராக அறிவித்தார். அங்கேயே நின்று கொண்டிருக்க சோமு என்ன வெறும் பதார்த்தமா? அவனுக்கும் உணர்ச்சிகள் உண்டுதானே! வெளியேறிய சோமு காலம் கடத்தவில்லை. கடன் பெற்று உரிய தொகையையும், பாக்கிப் புத்தகங்களையும், சரியான கணக்கோடு எடுத்துச் சென்று சாமியாரிடம் சம ர்ப்பித்தான். இப்போது அடிகள் புன்னகை பூத்தார். 'இதுதான் நல்லபிள்ளைக்கு அடையாளம். எதிலும், நாணயம் தவறாமல் நடக்கக் கற்றுக்கொள்’ என்று போதிக்கவும் செய்தார். அவற்றை பொன்போல் போற்றும் மனநிலை எப்பவோ போய்விட்டது சோமுவிடமிருந்து. நண்பன் சொன்னது சரிதான். இவர் பக்கா பிசினஸ் மேனாகத்தான் நடத்து கொள்கிறார். பணம், லாபம் முதலியவைகளில் கருத்தாக இருக்கிற ஈவு இரக்கமில்லாத முதலாளிக்கும் இவருக்கும். வித்தியாசமே கிடையாது. கோபம், ஆசை, பண மோகம். முதலியவற்றை துறக்கும்படி போதிப்பது ஊருக்கு உரியஉபதேசம்தானா? சே, இந்தப் போலித் துறவியிடமா நான்