பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 O வல்லிக்கண்ணன் புகழ்பெற்ற பிரதேசங்களுக்கும் போக தவித்தான். அவசரமே அவனுடைய இயக்கமாக இருந்தது. காலத்தோடு போட்டி விட்டுக் கொண்டு பறந்தான் அழகானந்தன். ஒரு சமயம், அவனுடைய நண்பன் ஒருவன் அவனோடு பேசிக் கொண்டிருந்தான். சட்டென்று நண்பனின் கவனம் எங்கோ பாய்ந்தது. அவன் முகம் மலர, கண்கள் ஒளிர, அங்கேயே கவனித் திருந்தான். அவனாகவே சொன்னான். 'சின்னக்குருவி. வாளித்தண்ணிரிலே விளையாடுகிறது. மூக்கால் தண்ணிரைக் கிளறி, சிறகுகளால் சிதறி, உல்லாச மாக விளையாடுகிறது. சந்தோஷமாகக் கூச்சலிட்டபடி. ஆ, அது எவ்வளவு அழகாக இருக்கு பாரேன்: அந்தக் குருவியின் செயலில் அழகைக் காணமுடிய வில்லை அழகானந்தனால், ப்சா, அடிக்கடி அது அப்படித் தான் பண்ணும். தண்ணியை சிதறி, இடத்தை நனைக்கும். அது ஒரு தொல்லை என்றான் சலிப்புடின். . . ஒரு குழந்தை சிரித்துக் கொண்டே ஓடி வந்தது. கன்றுக்குட்டி ஒன்று துள்ளி ஒடியது. குழந்தை கைகொட்டிச் சிரித்தது. "அது எவ்வளவு அழகாகச் சிரிக்குது. கன்றுக்குட்டி என்ன அழகா ஓடுது: என்று வியந்தான் நண்பன். - அழகானந்தன் அந்தப் பக்கம் பார்க்கவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். பளிச்சென சில வரிகள் அவன் பார்வையில் பட்டன. அழகைத் தேடி நீ உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சரியே. நீ போகிறபோது உன் உள்ளத்தோடு அழகுணர்வை எடுத்துப் போகவேண்டியது அவசியம்.