பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 () வல்லிக்கண்ணன் கேளுங்கள்; கொடுக்கப்படும் என்ற கொள்கை உடைய தங்களிடம் மீண்டும் கேட்கிறோம், கேட்டது கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு. நமது மகத்தான பத்திரிகையின் மகோன்னதமான மலர் தயாராகிறது. வழக்கம் போல் கதை, கட்டுரை, கவிதை எல்லாம் அனுப்பி உதவுக. நமக்கு வேண் டியவர் என்ற உரிமையோடு நாம் அனுப்பும் கோரிக்கை இது. -இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார். அவர் கேட்டவற்றை எழுத்தாளர் கொடுக்கத்தான் செய்தார். - யார் யாரோ புதுகி புதுசாகப் பத்திரிகை ஆரம்பித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நடத்தும் பத்திரிகையை நிறுத்திவிட மனமில்லாத எவராவது விடாது பிழைப்பை நடத்திக் கொண்டுதான் இருந் தார்கள். - எவராவது எப்பவாவது விசேஷ மலர் வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். - அவர்கள் எல்லோருக்கும் ஞானப்பிரகாசம் தெரிந்த வராய், வேண்டிய மனிதர் ஆகத்தான் இருந்தார். அவர்கள் நேரிலே கண்டு கேட்டார்கள். ஆள் அனுப்பிக் கேட்டார்கள். தபால் மூலம் கேட்டார்கள். வேண்டியவற்றைப் பெற்றார்கள். ஏனெனில், எல்லோருக் கும் ரொம்ப வேண்டியவர் ஆக விளங்கினார் எழுத்தாளர். ஞானப்பிரகாசம். - - காலம் ஓடியது. பத்திரிகைகள் பிறந்தன. தவழ்ந்தன. நடந்தன. படுத்தன. சில எழுந்து நின்றன. பல தோன்றின... ஞானப்பிரகாசம் எழுதிக் கொண்டேயிருந்தார்.