பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் ( 153 களுக்கு உதவி செய்வதற்கு?’ என்று கொதித்தது அவன் சிந்தனை. மாதவன் தன்னைச் சுற்றிலும் வறுமையின் கோரப் பிடிப்பையே கண்டான். வாழ்க்கையின் பயங்கர உருளையில் சிக்கி, மெளனமாக ரத்தம் கக்கியபடி அணு அணுவாகச் செத்துக்கொண்டிருக்கும் மனிதர்களையே கண்டான். உடலோய உழைத்தாலும் முழு வயிற்றுக்குச் சாப்பிடவும் வசதி இல்லாமல் அல்லல் உறும் மனிதர்களே அவனைச் சுற்றிக் காணப்பட்டார்கள். மலர்களை விட மென்மையான-களங்கமற்ற-குழந்தை களும், பொறுமையையே அணியாகக் கொண்ட பெண்களும், உழைப்பையே வாழ்வாக வரித்து விட்ட தொழிலாளிகளும் பசி எனும் கொடுந் தீயினால் தகிக்கப்பட வேண்டிய நிலை நீடிப்பதேனோ? - மாதவனும் வாழமுடியாதவர்கள் இனத்தைச் சேர்த் தவன்தான். எனினும், தன்னைவிட மோசமான நிலைமையில் இருப்பவர்களைப் பார்க்கையில், அவன் மனம் வேதனையால் கனம் பெறும். கஷ்டப்படுகிறவர்களுக்காக அனுதாபம் கொள் வதோடு, தன்னால் இயன்ற அளவு உதவியும் செய்வான் அவன். உதவி புரிவதற்குக் காசும் பொருளும் இல்லாத வேளைகளும் ஏற்பட்டு விடுவது உண்டு. ஆராயப் போனால், இவைதான் அதிகமாக இருக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் அவனுடைய வேதனை பெருகிவிடும். வாழத் தெரிந்து கொண்ட பலரைப் போல், தனது கண் களைக் குருடாக்கிக் கொள்ளும் கலையை அவன் கற்றறிய வில்லை. பணத்துக்கு மேல் பணம் சேர்ப்பதிலேயே கண்ணாக இருக்கிற செல்வர்களைப் போல், இதயத்தைக் கல்லாக்கிக் கொள்ளும் திறமையும் அவனிடம் இல்லை. பெரும் பகுதி வினரைப் போல சின்னதோர் கடுகு உள்ளம் அவனும்