பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 () வல்லிக்கண்ணன் அவன் நிலைமையை விளக்கியவுடன் அவள் குமுறி ாைள். - 'உனக்கு ரொட்டிதான் வேணுமாக்கும் இனிமேலே? பெரிய துரை வீட்டு நாய்க்குட்டி இவரு. ரொட்டிதான் தின்பாராமில்லே!...சி போ, போக்கத்தவனே... வெந்து போட்டதைத் தின்னுட்டு விதியேன்னு விழுந்து கிடக்காமல், ரொட்டி வேணும், சோறு வேண்டாமின்னு ஆரம்பிச் சிட்டான் என்று அண்ணன் சீறிவிழுந்தான். ‘இவனுக்குச் சோறு போடுவதே வீண் தெண்டம், இவன் ஒழுங்காக எங்கே பணம் தருகிறான்? என்று அண்ணி முணுமுணுத்தாள். இவ்வாறு சூடான பேச்சாக ஆரம்பித்த மனப்புழுக்கம் கொதிநிலை எய்தி, சண்டையாக முற்றி, அடிதடியில் முடிந்தது. ‘இனி இந்த வீட்டிலே உனக்கு இடமில்லை. வெளியே போ. திரும்பவும் இந்த வாசல் நடையில் அடி எடுத்து வைத்தாயோ, உன் கால் முறிந்துவிடும் என்று எச்சரித்து வழியனுப்பு உபசாரம் செய்தான் பெரியவன். இந்த விவகாரம் மாதவனுக்குத் தெரியும். அருணாசலத் தையும் அவன் அறிவான். நல்ல பையன்’ என்றும் தெரியும். அவனிடம் அனுதாபம் பிறக்கவே மாதவன் சிறுவனை அழைத்து என்ன கலாட்டா? என விசாரித்தான். நிகழ்ந்தது அனைத்தையும் அருணாசலம் அவனிடம் கூறினான். அவனது சோகப் பேச்சு மாதவனின் உள்ளத்தைத் தொட்டது. 'வளர்ச்சி அடைய வேண்டிய பருவம். பதின்மூன்றுபதினாலு வயசுப் பையனுக்கு ஒருவேளைச் சாப்பாடு கூடச்