பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 C வல்லிக்கண்ணன் கெஞ்சுகிறவனுக்கு - ஆளைப் பார்த்துக்கொண்டுஇரண்டனாவும் நாலனாவும் வழங்கியிருக்கிறான். நான் சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு, சாமி என்று தினக்குரல் கொடுத்த ஒருவனுக்கு அவன் ஒரு சமயம் ஹோட்டல் சாப்பாடே வாங்கிக் கொடுத்தது உண்டு. கிழிந்த கந்தல் ஒன்றைக் கட்டிக்கொண்டு திரிந்த ஒருவனுக்குப் புத்தம் புதிய வேட்டியையே அவன் கொடுத்துவிட்டான்...இவ்விதம் எவ்வளவோ! > மாதவன் உனக்காரன் அல்ல; அவனுடைய மாத வருமானம் ஐம்பது ரூபாய் கூட இல்லை என்கிற உண்மை களை நினைவில் கொண்டு கவனித்தால், அவனுடைய மனோ விசாலமும் கைத்தாராளமும் எத்தகைய மாண்பு உடையவை என்பது புரியும். - மறுநாளும், அதற்கு அடுத்த நாளும், பிறகும் அருணாசலம் மாதவனுக்காக வழியில் காத்து நின்றான். அவனைக் கண்டதும், பல்லெலாம் தெரியக் காட்டி, பருவரன் முகத்தில் கூட்டி, சொல் எலாம் சொல்வி காட்டி’ ரொட்டிக்காகக் கெஞ்சினான். - அவனது துயர நிலையையும், கெஞ்சும் முகபாவத்தையும் கண்டு மனம் இளகிய மாதவனுக்கு அவன் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. ஒவ்வொரு நாளும் ரொட்டி வாங்கிக் கொடுத்தான். இன்றுடன் நிறுத்தி விடுவான்... இன் றைக்கு அவன் ரொட்டி கேட்க மாட்டான்' என்று அவன் மனம் எண்ணும்; ஆசை வளர்க்கும், ஏமாற்றம் அடையும். 'ஸார், தயவு செய்து தினசரி எனக்கு ரொட்டி கொடுக் கும்படி கடையில் சொல்வி விடுங்களேன். அப்படியென்றால் நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாமல்லவா? நான் பாட்டுக்கு வந்து, கடைக் காரரிடமே ரொட்டி வாங்கிக் கொள்ளலாமே என்று