பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 () வல்லிக்கண்ணன் மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். தோட்டத்தின் பக்கம் போய், பாம்புப்புற்றில்ே கை விட்டார். வள்ளலின் கை என உணர்ந்து கொண்ட நாகம் அவரைக் கடிக்காமல், தனது ரத்தினத்தை அவர் கையில் கக்கிவிட்டு மறைந்தது. அதைக் கொண்டு வந்து அவர் தானமளித்துவிட்டாராம். கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் வாழ்க்கைத் தீயில் வதங்கி வாடுகிற நல்லவனுக்கு ரத்தினம் எங்கே கிடைக்கிறது.” - அவன் உள்ளத்தில் அமைதி ஏற்படவே இல்லை. வேதனை மண்டிய உள்ளத்தில் அமைதிக்கு இடம் ஏது? அவன் மனக் குகையிலே, என்றோ எங்கோ படித்த ஒரு பாடலின் சில அடிகள் எதிரொலி செய்தன: - ‘அண்டையன் பசியால் வாட அணங்கொடும் மாடி வாழ்தல் மண்டையன் குற்ற மன்று' - மன்னிடும் ஆட்சிக் குற்றம்: கொல்லுலையின் கொடுமூச்சை உந்தியது அவன் நெஞ்சம். குற்றத்தைப் போக்குவதற்குத் தனி ஒருவனின் அனல் மூச்சுக்கு சக்தி கிடையாதே!. 酉