பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகன O 15 "கில்லன்தான் இது. படித்தவர்கள் கில்ன் என்பார்கள் கில் என்றும் சிலர் உச்சரிப்பார்கள், கில் என்றால் கெர்ல்வது கில்லன் என்றால் கொல்கிறவன் என்று நாம் தமாஷாகக் குறிப்பிடலாம். உண்மையில் சாதாரண மக்களைக் கொல்லுகிற பணக்கார வேலைதான் இது. கில்லன் என்றால் காளவாய் என்று அர்த்தம், நம்மை எல்லாம் உயிரோடு சுட்டெரிக்கிற காளவாய்தான் இது!’ என்று திருவாளர் அனுபவம் புழுபுழுத்தார். புழுபுழுப்பு அவருடைய பொழுதுபோக்கு மாத்திரம் அல்ல. அவரது வாழ்க்கையே அதுவாக அமைந்திருந்தது! - அழகை இழந்திருந்த சிவபுரம் தன் அமைதியையும் இழந்துவிட்டது இப்போது. 誓