பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 17 பதித்துவிட்டுப் போயிருக்கும். ஆனாலும், நீர் முன்ன்ே மாதிரியேதான் இருக்கீர்னு ராமையா சொன்னான். அது சரியாத்தான் இருக்கு." இதைச் சொல்லிவிட்டு நாராயணன் உரக்கச் சிரித்தான். எதிர்பாராத அபூர்வ சந்திப்பு. இதைச் சிறப்பாகக் கொண்டாட வேணும். ஒட்டலுக்குப் போகலாம் வாரும்; என்று கூறி சுந்தரம் நகர்த்தார். ஆமாம். விசேஷ விருந்து வைத்தே கொண்டாடலாம். ரொம்ப காலத்துக்குப் பிறகு இப்போ சந்திச்சிருக்கோம். இனிமேல் எந்தக் காலத்திலே சந்திப்போமோ? என்றான் தாராயணன். இருவரும் ஒட்டலில் வசதியான இடத்தில் அமர்ந்து சாவகாசமாக சிற்றுண்டி சாப்பிட்டபோதே, பேச்சு விருந்தும் பரிமாறிக்கொண்டார்கள். தங்களின் இளம்பருவத்து சிநேகிதர்கள் பற்றி. அவர்களுடைய பிற்கால வாழ்க்கை பற்றி. யார்யார்; எப்படி எப்படி மாறிப்போயிருந்தார்கள் என்பது பற்றி. கடந்துபோன வருடங்களில் யார்யாரைக் சந்திக்கதேர்ந்தது என்பது பற்றியெல்லாம் சுவாரஸ்யமாகப் பேசினார்கள். எதிர்பாராத தகவல்கள் பல சுந்தரத்துக்குக் கிடைத்தன. 'உம்மாலே நம்பவே முடியாது. நம்மி கந்தப்பன் போவிஸ் இன்ஸ்பேக்டராகச் சேர்ந்து, வெற்றிகரமாகப் பணிபுரிந்து, பதவி உயர்வெல்லாம் பெற்றுவிட்டான்...' அப்படியா? ஆச்சர்யமா இருக்குதே. அப்போ ஆளு. நைய்யின்னு இருப்பானே! ஏதோ முகம் நல்லா இருந்துது உயரமா வளர்ந்திருந்தான். வீக் பாடிதான். சுந்தரம் நினைவுகூர்ந்தார். அது அந்தக் காலத்திலே. அப்புறம் ஆள் ஜம்னு ஆயிட்டான். இப்பொ அவனும் அவன் ஜபர்தஸ்துகளும்