பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 C வல்விக்கண்ணன் ஏதுப்பா நம்ம பழைய கந்தப்பனா இவன்னு திகைச்சுப் போவீரு திகைச்சு!" என்று நாராயணன் விவரித்தான். அதே போல, சுந்தரம் எதிர்பார்த்திராத விஷயம் நடராஜனின் வாழ்க்கைப் பற்றியது. பள்ளிக்கூடத்தின் மிகப் புத்திசாலி மாணவன். வகுப்பில் முதல்மார்க் வாங்குவான். வாத்தியார்களனைவரும் பாராட்டிய தன்பானாக்கன். அவன் மேல்படிப்பு படித்து, பட்டங்கள் பெற்று, வாழ்க் கையில் ரொம்பவும் பிரகாசிப்பான் என்று ஆசிரியர்கள் அடிக்கடி கூறினார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் பரிசுகள் பல அவனுக்குக் குத்தகை என்று அநேகர் சொல்வது வழக்கம். அவ்விதம், வருடந்தோறும் ஆங்கிலம் முதலாவது பரிசு, போய்ச் சேரும். வாழ்க்கையில் அவன் என்ன ஆனான்? கர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதித் தேறி, சப்ரிஜிஸ்திரார் ஆபீஸ் குமாஸ்தாவாய் பணியாற்றிக் கொண்டிருந்தான்... பத்திரங்களைப் பார்த்து நகல் எடுத்து நாளோட்டுகிற

"
..., - క్షీ:శళ},

‘நான் அவனை, டவுனுமில்லாத பட்டிக்காடாயுமில்லாத, இரண்டும் கெட்டான் Eர் ஒன்றிலே அந்த நிலைமையில் பார்த்தபோது, அவனுக்காக அனுதாபப்பட்டேன்’ என்று தாராயணன் தெரிவித்தான். - அது சரிதான். வாழ்க்கை பொதுவாக மனிதர்களை வஞ்சித்துவிடுகிறது. காலம் மக்களை தன் இஷ்டம்போல் ஆட்டிப்படைக்கிற பொம்மைகளாக இயக்குகிறது. ஒரு சிந்தனையாளன் சொன்னானே, மனிதவாழ்க்கை கலைத்துப் போடப்பட்ட சீட்டுக் கட்டுபோல் தாறுமாறாகச் சிதறுண்டு கிடக்கிறது என்று. அது சரியான கூற்று... சுந்தரத்தின் மனம் எண்ண அசை போட்டது. அவருக்கு விக்டரின் ஞாபகம் வத்தது.