பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 27 எங்கள் வாசல்..." என்று ஒலி பெருக்கிகள் ஒலமிட்டு வரவேற்றதில் ஒன்றும் குறைச்சல் இல்லை! உரிய முறைப்படி பண்டபாத்திரங்கள், பலகார வகைகள் முதலிய சகல சீர்சிறப்புகளுடனும் அந்த வீட்டிலே கொண்டு கமலத்தை சேர்த்துவிட்டு வந்த சிவசிதம்பரம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார் என்றால், அது நியாயமே யாகும். அந்த நிம்மதி அல்பாய்சானது என்பதை உணரும் சக்தி பெண்ணைப் பெற்ற பெரியவருக்கு அவ்வேளையில் இல்லை தான். அவருக்கு ஞானோதயம் ஏற்படுவதற்கு வெரு காலம் தேவைப்படவில்லை. இரண்டு, மூன்று மாதங்களிலேயே, ‘குலமிருக்கும் குண மிருக்கும் வாசல் எங்கள் வாசல் என்று பெருமை ஒலிபரப்பு பண்ணி, மருமகளே வா வா’ என்று அழைத்த வீட்டில் குணக்கேடர்களே குடியிருந்தார்கள் என்பது புரிந்து விட்டது. * அம்மா பர்வதம் இனிப்பு வகைகளும் முறுக்கு சீடை தினுசுகளும் தயாரித்துக் கொண்டு, மலர்ந்த முகத்தோடு மகளைப் பார்க்கப் போனாள். மறுநாளே கொண்டை முடிந்து தொங்கப் போட்டது போல் மூஞ்சியை'உம்'மென்து வைத்துக்கொண்டு திரும்பி வந்தாள். அவளுக்குப் புலம்பு வதற்குப் புதிய விஷயங்கள் கூடைகூடையாய் கிடைத் திருந்தன. ... " - கமலம் அங்கே சந்தோஷமாக இல்லை. மாமியார்காரி பெரிய தாடகை, மருமகளைப் படாதபாடு படுத்துகிறாள். மாப்பிள்ளைப் பையன் அம்மாப்பிள்ளை ஆக இருக்கிறான். நாம எவ்வளவோ செய்திருந்தும், அவங்களுக்குத் திருப்தி இல்லே... குறைகூறி, குத்திக்காட்டிக்கிட்டே இருக்கிறாங்