பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் () 31 "ஆண்மனம் என்பதுதான் இதுக்கெல்லாம் அடிப்படை, ஆண் என்ற எண்ணமே சமூகத்தில் பெரும்பாலாருக்கு ஒரு திமிரை, கர்வத்தை, பேராசையை, பெண்ணை அடக்கி ஆளும் விருப்பத்தை, மனைவியை அடிமை போல் கருதும் போக்கை எல்லாம் தந்து கொண்டிருக்கிறது. பெண்ணை வாழ்க்கைத் துணையாக மதிக்கும் பண்பைவிட, பெண் ணைக் கொண்டு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்- வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்- தனது சுகசவுகரியங்களையும் பலவிதமான தேவைகளையும் பூர்த்தி பண்ண வேண்டும் என்ற நினைப்பும் நடப்புமே ஆண்களிடம் காணப்படுகிறது. இந்த நிலைமை மாறினால்தான் பெண் சமூகத்தில் நல்வாழ்வு பெற முடியும். அதற்கு ஆண்களின் மனம் புனிதமுற வேண்டும். அப்படி மனம் வெளுப்பதற்கு மருந்தோ, மார்க்கமோ ஏதாவது உண்டோ?’ என்றார் அருணாசலம். அவர் ஒரு மாதிரியான நபர் என்பது மற்றவர்களின் எண்ணம். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவசிதம் பரத்தின் உள்ளத்து அனல், நெடுமூச்சாக வெளிப்பட்டது. 鲇