பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 37 ஆப்படித்தானே? என்றான். அச்சிறு குழந்தையின் பதிலுக்காகக் காத்திராமலே வடைகளை எடுத்து அவக் அவக்கென்று விழுங்கினான் அவன். -- சிவகாமி அவன் முகத்தையே-வாயையும் அதன் அசைவுகளையும்-கவனித்துக் கொண்டிருந்தாள். ☞pລfor அழாமல் இருப்பதா? அதுதான் பிரச்னை அவளுக்கு அந்த நேரத்திலே! - ? மூக்கையா அடுத்தபடியாக செல்லப்யாவை நோக் கினான். என்னடே, உனக்கு வடை பிடிக்காதோ? கையிலேயே வச்சிருக்கியே?’ என்று கேட்டுக் கை நீட்டினான். செல்லய்யா அம்மா, இவனைப் பாரு' என்று: கத்தினான். * , ; ‘என்னடா, T#ಣ? என்று குரல் கொடுத்தாள் ஜானகி. ‘இவன் என் வடையைப் பிடுங்கித் தின்னப் பார்க் கிறானம்மா என்று இழுத்தான் பையன். அதுக்கு முன்னாடி நீ தின்னுபோடு. அப்புறம் அவன் எடுக்கமாட்டான்' என்றாள் அம்மா. .**** அவனும் அவசரம் அவசரமாக இன்று முடித்தான். அதன் பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதுaேe நிகழ்ந்தது. மூக்கையா பிடுங்கித் தின்றுவிடுவான் என்று பயந்து, செல்லையா தன் பங்கைச் சாப்பிடுவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டலானான். சில தடவைகள் பறிகொடுத்து விட்டு, பேந்தப் பேந்த விழித்த அனுபவம் காரணமாக சிவகாமியும் பாடம் படித்துக் கொண்டாள். தனக்கு அளிக்கப்படும் உணவைப் பாதுகாப்பதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு; அதைச் சீக்கிரம் தின்றாகவேண்டும் என உணர்ந்தாள் அவள். அதைச் செயல்படுத்துவதிலும் தீவிரமானான். சு - 3