பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிய காரியம் செல்வநாயகம் வழக்கம்போல் பெரும்பேச்சு பேசிக் கொண்டிருந்தார். தன்னைப் பார்க்க வந்தவரிடம்தான். "நாம நம்ம :ாட்டை பார்த்துக் கொண்டிருப்பது தானா வாழ்க்கை: நம்மாலான சேவைகள் செய்ய வேண்டியதும், அவசியம். எனக்கு ரொம்ப நாளாகவே இந்த எண்ணம் உண்டு. பிறருக்கு உதவிகள் செய்யனும். என்ன பணி புரிவது என்பதுதான் தெரியவில்லை. அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டால், இன்பநிலை தானே வந்து எய்தும் என்பது உண்மையிலேயே உன்னதமான குறிக் ទ្រឹត្ro.* - "நீங்க சொல்வது சரிதான் என்றார் அவருடைய நண்பர் சின்னசாமி. - ~ - 'அன்பு அன்பை வளர்க்கும். அன்பற்ற உயிர்களிடம் அன்பாக இருப்பது தமக்கும் சந்தோஷம் தரும். இதை உணர்ந்து நடக்கிறவர்கள் எத்தனை பேர்?" செல்வநாயகம் இதைச் சொல்லியபடி நண்பரை பெருமை யாக நோக்கினார். அவர் செல்லமாக வளர்க்கும் நாய் ஓடி வந்தது. அவர் அருகில் நின்று வாலை ஆட்டியது. பக்கத்தில் காவியாக இருந்த நாற்காலியில் ஏறி உட்கார்ந்தது. அதை அவர் பிரியமாகத் தடவிக் கொடுத்தார். அதில் மகிழ்ச்சி கண்டார். w செல்வநாயகமும் நண்பரும் வெளியே கிளம்பினார்கள் வீட்டுத் திண்ணையில் எவனோ ஒருவன் உட்கார்ந்திருத்