பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A ) அல்விக்கண்ணன் "ஏ" மாமா வத்துட்டா: பட்டணத்து மாமா வந்தாச்க!” என்று பிள்ளைகள் கூச்சலிட்டு வரவேற்க, ராமலிங்கம் சிரிப்பு வெடிக்கும் முகத்தோடு, இறங்கினான். டிரைவர் சிறுபெட்டி ஒன்றை எடுத்துத் திண்ணையில் வைத்தான். பணத்தைப் பெற்றுக்கொண்டு, டாக்சியைக் கிளப்பி, அங்கிருந்து அகன்றான். - 'ாைப்பா ஷா ராசா வாங்க வர் தம்பிவரவேற்கும் குரல்களின் அன்பு ஒலிகள். அவனை அவன் கையை, பார்க்கும் பொருள் பொதிந்த பார்வைகள், - எப்படி இருக்கே செளக்கியம்தானே? பிரயாணம் சவுகரியமா இருந்துதா? கூட்டமும் நெருக்கடியும் நிறையத் தான் இருக்கும்:-ஆள் ஆளின் உபசரிப்புகள் விதம்விதமாக இருந்தன. என்ன, சின்னப்பெட்டி தானே இருக்கு இவன் கிட்டே இதிலே என்னத்தை நிறையக் கொண்டு வந்திருக்க முடியும்?...இந்தக் கவலை அவர்கள் மனசில். ராமன்ங்கம் உரிய பதில்களை சொன்னான்: ரொம்புக் கூட்டம்தான். டிக்கட் ரிசர்வ் செய்ய முடியலே. பத்துப் பதினஞ்சு நாளைக்கு முன்னாடியே ரிசர்வ் செய்தால்தான் வசதியாக இருக்கும். ஆபீஸ்லே வேலை ரொம்ப ஜாஸ்தி, வீவு கிடைப்பதே கஷ்டம். எப்ப கிடைக்கும் என்ன விஷயம்னே நிச்சயம் இல்லே. அதனாலே பத்து நாளைக்கு முந்தியே ரிசர்வ் செய்ய வழி இல்லே. இப்போகூட, 25-ம் தேதி போகலாம்னு முதல்லே சொல்லிட்டாங்க நானும் காயிதம் எழுதிப் போட்டேன். திடீர்னு டைரெக்டர் ஒருவர் டில்லி போயிட்டாரு நேத்து. இன்னொருத்தருக்கு சீக்கு. நீ கட்டாயம் போகத்தான் வேனுமான்னு கேட்டாரு. அவசியம் போகனும் சார்; காயிதம் எழுதிட்டேன்; . ஊருக்குப் போயும் மூணு வருஷம் ஆச்சு; இப்ப போகலேன்னு சொன்னா, இன்னும் ஒரு வருஷத்துக்குப் போக முடியாமலே ஆயிடும்னேன். சரி. போயிட்டு ஒரு வாரத்துக்குள்ளே வந்திருன்னாரு. ரயில்லே ஏகப்பட்ட கூட்டம். டிக்கட்.