பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் 0 88 கங்கைப் பெருவெளி சதுப்பு நிலமாக மாறுமோ மாறாதோ, தமிழ்நாடு வறண்ட பாலையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என அவன் கருதினான். இப்பவே நீரற்ற நதிகள்தான் இந்நிலப்பரப்பில் அதிகம் காணப்படு கின்றன. மழை இல்லை. எங்கும் வறட்சி. நாடு நெடு கிலும் மனிதர்கள் தண்ணிருக்காகப் படுகிற பாடு மிக்க மனக் கஷ்டம் தருவதாக இருக்கிறது. - இதுபற்றிய நினைப்புகளே அவனுள் புழுங்கின. அதன் விளைவாகவே போலும் அவன் விசித்திரமான கனவு கண்டான். அது மாதிரிக் கனவு அவனுக்குப் புதிய்து அல்ல. வெவ்வேறு சமயங்களில்-இதுவரை இரண்டு மூன்து தடவைகள் இதே கனவு வந்திருக்கிறது. கடல் வற்றி வறண்டு போகிறது. வெறும் தரை காட்சிப் படுகிறது. கண்ட கண்டபொருள்களும், கடல் வாழ் ஜீவன் களின் கூடுகளும், எலும்புகளும் பிறவும் எங்கும் தென்படு' கின்றன. மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவனும் உள்ளே இறங்கி நடக்கிறான். திடீரென்று அலைகள் மீண்டும் வருகின்றன, வேகமாக வருகின்றன. மக்கள் ஆலறி அடித்து, உயிர்தப்ப கரை நோக்கி ஓடுகிறார்கள். அவனும் ஒட முயல்கிறான். அவன் கால்கள் இயக்க சக்தியை இழந்து விட்டன. பயங்கரமான பேரலை அவனை நோக்கி விம்மி எழுந்து சாடிவருகிறது. அச்சத்தால் நடுங்கி அலறியபடி அவன் விழிக்கிறான். திசமாகவே நடப்பது போன்ற உணர்வுடன் பதறி அலறி, விகாரக்கூச்சலிட்டு விழித்தெழுவது அவன் வழக்கம். இப்பவும் அதேமாதிரிக் கனவு. ஆனால், சிலகில மாறு தல்கள் இருந்தன. இது மாநகரின் கடலோரம் இல்லை. மகாபலிபுரம் சூழல் தோற்றம், கரைமீது கற்கோயில்கள், சிற்பங்கள் அலை வந்து يحسسية