பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் C 8ே வந்தாலும் தப்பு; சீக்கிரம் வந்தாலும் தப்பு இவகிக தர்பாரிலே! - சந்திரன் பேச்சுக்கு நண்பன் ரத்னம் என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தான். அந்தப் பெண்ணைப் பார்த்தான். துடிப்பாகத் தோன்றிய அவள் அவசரப்படுத்தினான். 'உம் உம். இலையைப் பரப்பி தண்ணி தெளியுங்க. இட்லி வைக்கட்டும். எத்தனை தேரம் தான் இட்லியை தட்டிலே வச்சுகிட்டு காத்து நிற்கிறது? என்றாள். சந்திரன் பயந்தவன் போல் பரபரப்பாகச் செயலாற்தி னான். அவள் இட்லிகளை வைத்தாள். சட்னி போட்டாள். சாம்பாரும் ஊற்றினாள். நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு வரவே இல்லையே ஏன்? என்று கேட்டாள். நண்பர்களோடு பேசிக்கிட்டிருந்தேன். பொழுது போனதே தெரியலே. ரொம்ப நேரம் ஆயிட்டுது. அதுக்கு மேலே இங்கே வருவானேன்னு வரலே! அப்ப ராத்திரி சாப்பிடவே இல்லையா? சாப்பிட்ாம இருக்க முடியுமா? பன், பழம், டீன்னு உள்ளே தள்ளி வயிற்றை ரொப்பினேன்' என்று சந்திரன் கூறினான். 'ஊகுங். இது சரியில்லே என்று அவள் தலையாட்டி. னாள். அப்போது அவள் முகத் தோற்றம் அதிகக் கவர்ச்சிகர மாக இருந்தது. எது சரியில்லே?" என்று வம்புக்கிழுத்தான் சந்திரன். "உங்ககிட்டே ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு இல்லே. சாப்பாட்டு விஷயத்திலேயே இப்படின்னு சொன்னா, மற்றக்