பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் O 57 அழைத்து வரக்கூடும். விடுதிப் பெருமையை அறிந்த எவராவது ஒருவர் தேடி வத்து விடக்கூடும். அப்போதெல் லாம், சாப்பாடு இல்லை; திரும்பிப் போங்க என்று சொல்ல முடியுமா என்ன? சாப்பாட்டுப் பொருள்கள் ரெடியாக இருந்தால் எப்படியும் விலையாகிப் போகும். அப்படியே விலைடோகாது எஞ்சிக்கிடந்தாலும் வீணாகவா போய்விடும்? அதில்லை, குடும்பத்தினர் சாப்பீட உதவும். குடும்பத் தலைவர் சிவநேசம்தான் அந்த உணவு விடுதியின் அதிபர். அவர் மனைவி அன்னம்மாள் உணவு வகைகளை அதி ருசியாகத் தயாரித்தாள். பெரியமகள் மீனாட்சி ரொம்ப ஒத்தாண்சயாக இருந்தாள். அவன் வாழாவெட்டி, தோசைக்கு மாவு அரைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீடு பெருக்குவது, எச்சில் இலைகள் எடுப்பது போன்ற சகல காரியங்களையும் அவளே கவனித்துக் கொண்டாள். வெளியே கடைகளுக்குப் போய்வருவது, கணக்கு வழக்கு களை கவனிப்பது, சாப்பிட வருகிறவர்களை உபசரித்து உணவு பரிமாறுவது முதலிய வேலைகள் அவர் பொறுப்பு. ஆட்கள் அதிகமாக வராத நேரங்களில், இளைய மகள் புஷ்பா கவனித்துக் கொள்ளக் கூடிய சமயங்களில், வெளி அலுவல்களை முடிப்பதற்காக சிவநேசம் போய்விடுவார். அது போன்ற வேளைகளில் புஷ்பாவின் ஆட்சிதான். எட்டாவது வரை படித்தது போதும் என்று பெற்றோர் அவள் படிப்பை ஏறக் கட்டிவிட்டார்கள். கடையை கவனிக்கவும் ஆள் வேண்டும் அல்லவா? உதவிக்கு ஒரு ஆள் நியமித்தால் அதிகப்படியான செலவு தானே ஆகும்?" புஷ்பா வீட்டோடு இருந்தால் உதவிக்கும் உதவி, செலவும் மிச்சம் என்று அம்மா வழிகாட்டியபோது, அப்பா அதை அங்கீகரித்தார். மகளின் முரண்டு செல்லுபடியாகவில்லை.