பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ரு வல்லிக்கண்ணன் பொம்மெனப் புகுந்து மொய்ப்பது அன்றை விசேஷம். ஆகும். வண்டி கட்டிக் கொண்டுவருவார்கள். பஸ்களிலும். வந்து சேர்வார்கள். நடந்து வருவோர் எண்ணிக்கையும் மிக பக்கத்து கிராமம் ஒன்றிலிருந்து அதிகாலையிலேயே வந்துவிட்ட கைலாசம்பிள்ளை தாமிரவருணியில் குளிரக் குளிர நீராடிவிட்டு முருகனை தரிசித்து, நெற்றி நிறையத். திருந்தும், மார்பு முழுவதும் சத்தனமும் துலங்க, மகிழ்ச்சி யோடு திரும்பிக் கொண்டிருந்தார். பக்தி மீதுறப் பெரு விட்டாலும், சும்மா போய் வரலாமே என்தும் பக்கத்து வீட்டு அண்ணாச்சிக்குத் துணையாக என்றும் அவரோடு வந்த கந்தபிள்ளை, காதுகள் அவர் பேச்சைக்கேட்க, கண்கள் அத்திலும் நெடுக மேய, மெதுவாக நடந்தார். கல்பாலம் ஆரம்பிக்கிற இடத்தில் படிக்கட்டு ஆற்றங் கரையை ஒட்டி, அதன் மீது ஏறி உயர்ந்த ரஸ்தாவை: அடைய வேண்டும். படிக்கட்டு, ஒரு புறத்தில் விசாலித்து ஒரு. சிது கோயிலுக்கு இட்டுச் சென்றது. பிள்ளையார் கோயில். ரோடிலிருந்து இறங்கி வருகிறவர்கள், பாலத்திலிருந்து: எதிரேறி வரும் ஆட்களை விட்டு வழிவிலகுவதற்காக, பிள்ளையார் கோயிலைச் சுற்றிவருவதும் உண்டு. அப்படி வந்தவர்களில் இரண்டுபேர் கந்தபிள்ளை. பார்வையில் பளிச்சென்று பட்டார்கள். பெண்கள் நடுத்தர வயதினர். - படிக்கட்டு வழியாக நேரே விருவிரென்று இறங்காமல், நின்று நின்று, வேடிக்கைப் பார்த்தும், எதுஎதையோ சுட்டிக்காட்டிப் பேசிச் சிரித்தும் மந்தகதியில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களையே கார்ப்பதுபோல். கந்தபிள்ளைக்குப் பட்டது. . - ...