பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரப் பறவைகள் о 7з யாரோ ந்ம்மை எதுக்குப் பார்க்கப் போறாங்க?இப்படி அவர் மனம் மு ைமுணத்தது. அவர் பார்வை அண்ணாச்சி பக்கம் புரண்டது. - பெரியவர் நேரே கண்பதித்தபடி, முருகா அப்பனே சண்முகா! என்று குரல் கொடுத்தபடி நடந்து கொண்டிருதி தார். ரோடில் ஏறி, சிறிது தூரம் சென்று அங்குள்ள சைவாள்காப்பி கிளப்பில் சூடாக ஒரு காப்பி சாப்பிட வேண்டும் என்ற மன அரிப்பு அவருக்கு. சுடச்சுட வடை இருந்தாலும் இருக்கும்; ரெண்டை உள்ளே தள்ளி, காப்பியும் குடித்தால் ஜம்னு இருக்கும் என்ற நினைப்பு அவரை இயக்கியது. படி வரிசையில் கால் வைத்துவிட்டார் பெரியவர். அவர் இயங்குதலுக்கு ஸ்டன்பிரேக் போடுவதுபோல வெடித்து வந்தது ஒரு அழைப்பு. கைலாசம் பிள்ளேய்1... ஒய் கைலாசம் பிள்ளேய்!” யார் கூப்பிடுவது என்று திரும்பிப் பார்த்தார் பெரிய :பிள்ளை. கந்தபிள்ளையும் அதிசயமாக நோக்கினார். "நான் தான். இப்படி வாங்க... என்ன கைலாசம் :பிள்ளை, நாங்க நிற்பதை கவனிக்காமலே போறிகளே? . உரத்த குரலில் இப்படி ஒலிபரப்பி, கையை ஆட்டிக் கூப் .பிட்டு நின்றது, பிள்ளையார் கோயில் பக்கம் தென்பட்ட பெண்களில் ஒருத்திதான். நெட்டை என்று சொல்லப்படவேண்டிய உயரம். கொஞ்சம் பருமன்தான் என நினைக்கத் தூண்டும் சதைப் பிடிப்பு. கருப்புமில்லை, சிவப்புமில்லை என்று தோன்றுகிற 'பொதுநிற்ம் பெரிய முகத்துக்கு சிறிதாக அமைந்த கண்கள். எடுப்பாகத் தெரிந்த பற்கள். முகம் சிரிப்பாய் பூத்திருக்க, அபற்கள் மிக எடுப்பாய் தென்பட்டன.